கறி வாங்கி காசு தரவில்லை; பிரபல பிரியாணி கடை உரிமையாளர் கைது

புதுச்சேரி: பிரியாணிக்கு கடைக்கு ஆட்டிறைச்சி வாங்கி, ரூ.23 லட்சம் மோசடி செய்த, 'யா மொய்தீன் பிரியாணி' கடை உரிமையாளர் கைது

Continues below advertisement

புதுச்சேரி: பிரியாணிக்கு கடைக்கு ஆட்டிறைச்சி வாங்கி, ரூ.23 லட்சம் மோசடி செய்த, 'யா மொய்தீன் பிரியாணி' கடை உரிமையாளரை புதுச்சேரி ரொட்டியார்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Continues below advertisement

புதுச்சேரி மூலகுளம், ரங்கா நகரை பகுதியைச் சேர்ந்தவர் போலாசா ( வயது 54 ); இவர் மேட்டுப்பாளையத்தில் 'மாலிக் பாய் மட்டன் சப்ளை கடை நடத்தி வருகிறார். இவரை கடந்த 2019ம் ஆண்டு தொடர்பு கொண்ட கொசப்பாளையம், டி.ஆர்.நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த சேதுராமன் மகன் பாலச்சந்திரன், அவரது மனைவி ரம்யா ஆகியோர், புதுச்சேரி இந்திராகாந்தி சிக்னல் மற்றும் பல இடங்களில் பல்லாவரம் 'யா மொய்தீன் பிரியாணி கடை துவங்க உள்ளதால், ஆட்டிறைச்சி வழங்கும் படி கூறியுள்ளார்.

விழுப்புரத்திலும் பிரியாணி கடை கிளையை துவங்கியுள்ளதாக கூறி, அதற்கும் ஆட்டிறைச்சி வழங்கும்‌ படி கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் ஆட்டு இறைச்சி வாங்கியதில், ரூபாய் 23 லட்சம் நிலுவை ஏற்பட்டது.

போலாசா  நிலுவையிலுள்ள பணத்தை கேட்ட போது, தமிழகத்தில் மேலும் சில கிளைகள் திறக்க உள்ளதாகவும், அதற்கும் நீங்கள் தான் ஆட்டு இறைச்சி கொடுக்க வேண்டும் என ஆசை வார்த்தை கூறினர். அதனை நம்பி, தொடர்ந்து ஆட்டு இறைச்சி கொடுத்து வந்தார். பாலச்சந்திரன் கூறியபடி, சமீபத்தில் புதுச்சேரி அண்ணா சாலையிலும், யா மொய் தீன் பிரியாணி கடை திறக்கப்பட்டது. கடந்த மாத இறுதியில் நிலுவை தொகையை போன் செய்து கேட்ட போது, பாலச்சந்திரன் சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.

T.r.நகரில் உள்ள வீட்டிற்கு சென்று பணத்தை கேட்ட போலாசாவிற்கு பாலசந்தரின் பயங்கர மிரட்டல் விடுத்தார். இது குறித்து போலாசா அளித்த புகாரின் பேரில், பாலச்சந்திரன், மனைவி ரம்யா, தந்தை சேதுராமன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்த ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பாலச்சந்திரனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பிரியாணி கடைக்கு கறி வாங்கி 23 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola