ஜம்மு காஷ்மீர் காவல்துறை டைரக்டர் ஜெனரல் ஹேமந்த் கே லோஹியாவின் கொலையில் முதன்மை சந்தேக நபரான யாசிர் அகமது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் ”மன அழுத்தத்தில் இருந்தார்”என்று அவரது சமீபத்திய டைரி பதிவுகளை மேற்கோள் காட்டி போலீசார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






23 வயதான அகமது டைரியில் மொத்தமும் சோகத்தைக் கொண்டு நிரப்பியுள்ளார். தன் சோகத்தை மேலும் அதிகரிக்க அவற்றில் சில பாலிவுட் பாடல்களின் வரிகளையும் சேர்த்து  சில பதிவுகளை எழுதியுள்ளார். "ஐ ஹேட் மை லைஃப்" மற்றும் "டியர் டெத், ஐ ஆம் வெயிட்டிங் ஃபார் யூ" என்றெல்லாம் தனது பக்கத்தில் எழுதியுள்ளார். 


ஆஷிகி 2 திரைப்படத்தின் பிரபலமான பாலிவுட் பாடலான "புலா தேனா முஜே, ஹை அல்விதா துஜே", பிரிvu மற்றும் பிரிவினை பற்றி பேசுகிறது. அந்த வரிகளையும் தனது பக்கத்தில் எழுதியுள்ளார். 




அவர் தனது வாழ்க்கையில் "99 சதவிகிதம் மனச்சோர்வடைந்ததாக" குறிப்பிட்டுள்ளார். “நான் பத்து சதவீதம் மகிழ்ச்சியாக இருக்கிறேன், காதலில் பூஜ்ஜியம் சதவீதம், தொண்ணூறு சதவீதம் மன அழுத்தத்தில் இருக்கிறேன். எனது இருப்பை நான் வெறுக்கிறேன், ஏனெனில் அது எனக்கு துக்கத்தைத் தருகிறது, மேலும் மரணத்தை மீண்டும் சந்திக்க நான் ஏங்குகிறேன், ”என்று தனது டைரியில் எழுதியுள்ளதாக போலீசார் வாசித்துக் காண்பித்தனர்.


"எனக்கு எனது வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டும்", "ஜிந்தகி து பாஸ் தக்லிஃப் தேதி ஹை, சுகூன் து மௌத் ஹாய் தேதி ஹை (வாழ்க்கை மட்டுமே வலிக்கிறது, மரணம் அமைதியைத் தருகிறது), மேலும் "தினமும் நாள் எதிர்பார்ப்புடன் தொடங்குகிறது, ஆனால் மோசமான அனுபவத்துடன் முடிகிறது" என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.


23 வயதான யாசிர் அகமது கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார், அவரைப் பிடிக்க பெரிய அளவிலான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


திங்கள்கிழமை இரவு, டிஜி லோஹியா ஜம்முவின் புறநகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு, உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அகமது சுமார் ஆறு மாதங்களாக வீட்டில் வேலை செய்து வந்தார்.


முன்னதாக, டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில், கொலை நடந்த இடத்தை முதற்கட்ட பரிசோதனை செய்ததில் லோஹியா காலில் எண்ணெய் தடவி இருப்பது தெரியவந்தது. தாக்குதல் நடத்தியவர் லோஹியாவை அடித்துக் கொன்று, உடைந்த கெட்ச்-அப் பாட்டிலால் அவரது கழுத்தை அறுத்து, பின்னர் அவரது உடலில் தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது.


”கொல்லப்பட்ட சிறை அதிகாரி, தனது காலில் தைலம் தேய்த்துக் கொண்டிருந்த போது அறையை உள்ளே இருந்து பூட்டியுள்ளார். அவர் மீண்டும் மீண்டும் ஒரு கூர்மையான பொருளால் அவரைத் தாக்கியுள்ளார், மேலும் அவரது உடலைப் பற்ற  வைக்க அவர்மீது எரியும் தலையணை ஒன்றையும் எறிந்துள்ளார்." என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.