விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள சிறுவாடியை சேர்ந்தவர் தயாளன் (45). இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை கீழ்பேட்டையை சேர்ந்தவர் உதயகுமார். இவர் பேட்டரி கடை நடத்தி வருகிறார். எனக்கு நண்பர் என்ற முறையில் அறிமுகமானார். அப்போது அவருடைய தொழிலை விரிவாக்கம் செய்வதற்கும், என்னை பங்குதாரராக சேர்ப்பதாகவும் கூறி பண உதவி கேட்டார்.
cv shanmugam Press meet | நம்பர் 1 முதல்வர் ஆட்சிதானே? ஏன் மின்வெட்டு? சீறிய சி.வி.சண்முகம்
இதில் நான் எனது குழந்தைகளுக்காக சிறுக, சிறுக சேமித்த 12 லட்சம் ரூபாயை வங்கி கணக்கு மூலமாகவும் நேரடியாகவும் பல தவணைகளாக கொடுத்தேன். இதில் முதல் 3 மாதம் மட்டும் பங்கு பணம் கொடுத்தார். பின்னர் பணம் தராமல் இழுத்தடித்தார். இதையடுத்து பணத்தை திருப்பிக் கேட்டபோது கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். அவருக்கு சொந்தமான வீட்டுமனையை கிரயம் செய்து கொடுப்பதாக கூறி பத்திரத்தை கொடுத்தார். ஆனால் அந்த பத்திரம் போலியானது என்று தெரியவந்தது.
Fake Certificate| 1000 போலிச் சான்றிதழ்.. மத்திய அரசுப் பணிகளில் வடமாநிலத்தவர்கள் மோசடி!
Kodanadu Murder case | 10 மணி நேரம்! 100-கும் மேற்பட்ட கேள்விகள்! சசிகலா விசாரணை!
மேலும், அவர் கொடுத்த காரும் லோனில் இருப்பது தெரியவந்தது. அப்போது அவர் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கு அவரது நண்பர் சிவபாலனும் உடந்தையாக இருந்தார். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் உதயகுமார் பண மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உதயகுமார், அவரது நண்பர் சிவபாலன் ஆகிய 2 பேர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட உதயகுமார் மரக்காணம் ஒன்றிய அ.தி.மு.க. பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்