தாம்பரம் பகுதியில்...

 

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையில் இளம் காதல் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகள் என தினதேறும் மாலை நேரத்தில் இரண்டு இரண்டு பேராக அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி தனியாக இருக்கும் காதல் ஜோடிகளிடம் சென்று தான் போலீஸ் என கூறி ஆண் நபரை மட்டும் தனியாக அழைத்து‌ உங்கள் அப்பாவின் தொலைபேசி எண் மற்றும் வீட்டு விலாசத்தை கேட்டுள்ளார். காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்து விடுமோ என்று நினைத்துக் தர மறுத்துள்ளார். விலாசம் தரவில்லை என்றால் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் செல்வேன் என மிரட்டியுள்ளார் அந்த ஆசாமி.



 

காவல் நிலையம் வரவில்லை என்றால் நீங்கள் 5000 ரூபாய் கொடுத்தால் போதும் என கூறியதும், காதலர்கள் கையில் இருந்த 3000 ரூபாயை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அந்த ஆசாமி தினந்தோறும் அப்பகுதியில் வரும் காதல் ஜோடிகளிடம் போலீஸ் என மிரட்டி பணம் வாங்குவதை வழக்கமாகக் வைத்துள்ளார். இதனை அடுத்து சிறு சிறு தொகைகள் மட்டுமே பார்த்த அந்த டிப்டாப் ஆசாமி விரைவாக பணத்தை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு படி மேலாக யோசித்து திருமணமாகி இருக்கும்,  கள்ளக்காதல் ஜோடிகளை குறிவைத்து அந்த டிப்டாப் ஆசாமி.

 

நெருக்கமாக இருக்கும் வீடியோ

 

காரில் இரண்டு பேர் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து தொடங்கி உள்ளார் அவர்களிடம் சென்று தான் போலீஸ் என கூறி நீங்கள் இருவரும் காவல் நிலையம் வரவேண்டும் என மிரட்டி அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை காண்பித்து பணம் நகைகள் கொடுத்தால் வீடியோவை டெலிட் செய்து விடுகிறேன் என்றும் இல்லையென்றால் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிப்பேன் என கூறியதும் பயந்துபோன கள்ளக்காதல் ஜோடிகள் பணம், தாலி, சங்கிலி உட்பட நகைகளை கொடுத்துள்ளனர் அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து விரைவாக சென்றுள்ளார்.

 

அவர்கள் கள்ளக்காதலர்கள் என்பதால் காவல் நிலையத்தில் புகார் தராமல் இருந்துள்ளனர். முடிச்சூர் சர்வீஸ் சாலையில் ஒரு நபர் போலீஸ் என கூறி பணம் நகைகளை வாங்கிச் செல்வதாக உளவுத்துறை மூலமாக தாம்பரம் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது,

 

ஏம்பா நான் போலீஸ்

 

தகவலின் அடிப்படையில் கமிஷனரின் உத்தரவின் பேரில் பீர்க்கன்காரணை காவல் ஆணையாளர் சிங்காரவேலன் தலைமையில் ஏழு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் உள்ள பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கினார். முதற்கட்ட விசாரணையில் முடிச்சூர் சர்வீஸ் சாலையில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று காரில் இருந்த கள்ளக்காதல் ஜோடிகளின் ஆண் மற்றும் கார் ஓட்டுநர் இருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அழைத்து சென்று அந்த நபர் வைத்திருந்த சுமார் 5000 ரூபாயை வாங்கிக் கொண்டு இங்கே நிற்குமாறு சொல்லி விட்டு காரில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சென்று தாலி சங்கிலி உட்பட 11சவரன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றதாகவும்.




 

அதேபோல் கடந்த மே 19-ஆம் தேதி அன்று வண்டலூர் பகுதியில் காரில் நெருக்கமாக இருந்த கள்ளக்காதல் ஜோடிகளின் வீடியோ எடுத்து அவர்களிடம் போலீஸ் என கூறி நகைகளை வாங்கி சென்று இருப்பதும், மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா, மகாபலிபுரம், உட்பட என ஐந்து இடங்களில் சுமார் 50 சவரன் நகைகளை போலீஸ் என கூறி பணம் நகைகளை வாங்கி சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.

 

சிசிடிவி காட்சிகள்

 

இதனையடுத்து போலீசார் இவரை பிடிக்க வேண்டும் என்பதற்காக சம்பவம் நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது கடந்த பத்து வருடங்களாக செயின் பறிப்பில் ஈடுபடும் இவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது-39) என தெரியவந்தது. அதுமட்டுமின்றி சமீபத்தில் பள்ளிக்கரணை பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கி சிறைக்குச் சென்று கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று சிறையில் இருந்து வெளியில் வெளிவந்துள்ளார். உடனே சிவராமனை பிடிக்க தனிப்படை போலீசார் கடலுருக்கு சென்றனர் அங்கு அவர் இல்லாததால் சிவராமனின் கைபேசி எண்ணை வாங்கிக் கைபேசி எண்ணை டிரேஸ் செய்து பார்த்தபோது பாண்டிச்சேரியில் இருப்பதாக தெரியவந்தது

 

பெங்களூரில் சொகுசு

 

பாண்டிச்சேரியில் இரண்டு நாள் தங்கியிருந்து அவரை தேடி வந்தனர் அங்கு அவர் கிடைக்காததால் பின்னர் அவரது கைபேசி எண்ணை மறுபடியும் டிரேஸ் செய்து பார்த்த போது அவர் பெங்களூரில் இருப்பதாக தெரியவந்தது, தனிப்படை அங்கும் விரைந்து சென்றது அங்கும் குற்றவாளி சிக்காததால் மீண்டும் சென்னைக்கே திரும்பியது தனிப்படை. குற்றவாளி நன்மங்கலத்தில் அவரது மாமியார் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து உடனே போலீசார் விரைந்து சென்று அவரைக் கைது செய்தனர். ஓட்டேரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது 2012ஆம் ஆண்டில் கடலூரில், இருந்து சென்னைக்கு இருசக்கர வாகனம் மூலம் கூட்டாளிகளுடன் வந்து சென்னை உட்பட பல இடங்களில் செயின் பறிப்பை அரங்கேற்றி விட்டு மீண்டும் கடலுருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதாக கூறினார்.




 

41 வழக்குகள்

 

சென்னை உட்பட மாமல்லபுரம், தேவனாம்பட்டினம், நெய்வேலி கள்ளக்குறிச்சி, என பல்வேறு காவல் நிலையங்களில் செயின் பறிப்பு மட்டுமே சுமார் 41 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் செயின் பறிப்பில் வரும் நகைகளை தாம்பரம் மற்றும் கடலூரில் உள்ள மார்வாடி கடையில் விற்று அதில் வரும் பணத்தில் பாண்டிச்சேரி பெங்களூர் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் எடுத்து மதுபோதையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்தாங்க என குற்றவாளி பகிர் வாக்குமூலம் அளித்தார். அதன் பின்னர் சிவராமனிடம் ஒரு பல்சர் இருசக்கர வாகனம் 25,சவரன் தங்க நகைகள் மற்றும் 5,70,000 ரூபாய் பறிமுதல் செய்தனர், பின்னர் அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்