திருவொற்றியூரை சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் தந்தை தனியார் நிறுவனத்திலும், தாய் மாநகராட்சி தூய்மை பணியாளராகவும் பணியாற்றி வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தபடியே அந்த சிறுமி ஆன்லைன் வகுப்பில் படிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். 


அப்போது, எதிர் வீட்டில் வசிக்கும் 33 வயதான வேன் டிரைவர் ராகவா ராஜா என்பவர், அந்த சிறுமியிடம் நட்பாக பழகி வந்துள்ளார். ராகவா ராஜாவிற்கு திருமணமாகி ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வீட்டில் பெற்றோர் இல்லாதபோது சிறுமி வீட்டிற்கு சென்ற ராகவா ராஜா, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் சிறுமி மயங்கி விழுந்துவிட, இதை பயன்படுத்தி கொண்டு ராகவா ராஜா சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அந்த கொடுமையாக காரியத்தை வீடியோவாகவும் செல்போனில் பதிவு செய்துள்ளார்.


சிறிது நேரத்தில் கண் விழித்து பார்த்த சிறுமி, தான் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து கதறி அழுதார். இதுகுறித்து ராகவா ராஜாவிடம் சிறுமி சண்டையிட, இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை பலாத்காரம் செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும், குடும்பத்தை அனைவரது முன்னிலையிலும் அசிங்கப் படுத்திவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.


பின்னர், அந்த வீடியோவை காண்பித்து சிறுமியை மிரட்டி அடிக்கடி ராகவா ராஜா பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், சிறுமி கர்ப்பமானதை அறிந்த ராகவா ராஜா, கருவை கலைக்கும் மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். அதை உண்ட சிறுமிக்கு பலவீனடைந்து உடல்நிலை சரியில்லாமல் போனது.


இந்தநிலையில், நேற்று முன்தினம் சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய், சிறுமியிடம் இதுபற்றி கேட்டபோது, நடந்தவற்றை அழுத படி கூறியுள்ளார்.


இதையடுத்து, சிறுமியின் தாயார் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார் ராகவாராஜாவை தேடி வீட்டுக்கு சென்றபோது அவர் தலைமறைவானது தெரிந்தது.


உறவினர் வீட் டில் பதுங்கி இருந்த அவரை நேற்று கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.பின்னர் அவரிடம் இருந்த வீடியோவை பறிமுதல் செய்த போலீசார் ராகவா ராஜா மீது போக்சோ சட்டத்தின்கீழ்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண