ஆபாச வீடியோ எடுத்து கல்லூரி பேராசிரியரை மிரட்டி பணம் பறித்ததாக 3 பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தரமணியில் உள்ள மத்திய அரசின் என்ஐடியில் பேராசியராக இருக்கிறார். இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் ஆர்த்தி என்பவரின் தோழி ராதா, பேராசியருக்கு பரீட்சயமாகி இருக்கிறார். ராதா அவரிடன் நன்கு பழகி நம்பிக்கையான நபர் என்று தன்னை காட்டிக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, மூன்று வருடங்களுக்கு முன்பு ராதா பிஸினஸ் தொடங்குவதற்காக ராஜேந்திரனிடம் கடன் கேட்டுள்ளார். ராதாவை நம்பி நான்கரை லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ராதாவை நம்பி கொடுத்த கடன் திரும்ப கிடைக்காமல் தவித்து வந்துள்ளார் ராஜேந்திரன். பலமுறை கேட்டும் ஏமாற்றி வந்ததை தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராதாவுக்கு நீதிமன்றம் பிடியானை உத்தரவு பிறப்பித்தது.
இதனால், உஷாரான ராதா, உடனே வாங்கிய கடனை கொடுப்பதாக கூறி ராஜேந்திரனை தனது தோழியின் வீட்டுக்கு அழைத்துள்ளார். ராதாவின் பேச்சை நம்பி ராஜேந்திரன் அங்கு சென்றார். அவரை அன்பாக பேசி வரவேற்ற ராதா, குடிக்கும் நீரில் மயக்க மருந்து கலந்துகொடுத்ததாக கூறப்படுகிறது. உடனே, மயக்கம் அடைந்த ராஜேந்திரனை, மற்றொரு தோழியுடன் பெட்ரூமில் ஒன்றாக இருப்பது போல ஆபாச வீடியோ எடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, ஆபாச வீடியோ காட்சிகளை பேராசிரியர் ராஜேந்திரனிடம் காட்டியுள்ளார் ராதா, கொடுத்த கடனை கேட்டால் வீடியோவை இணையத்தில் லீக் செய்துவிடுவேன் மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரனிடம் மேலும் மிரட்டி பணம் வாங்க முயன்றுள்ளார்.
ராதாவின் மிரட்டலுக்கு பணியாமல் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் கூறினார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராதா, லஷ்மி, அவரின் கணவர் முருகன், புஷ்பா ஆகியோரை கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்