சென்னை புழல் சிறை உயர் பாதுகாப்பு பிரிவில் இருந்து பயங்கரவாதி போலீஸ் ஃபக்ருதீன் அதிகாரிகளை மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. வெளியில் இருக்கும் தனது ஆதரவாளர்களை வைத்து தீர்த்து கட்டிவிடுவேன் என மிரட்டியதாக புழல் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புழல் மத்திய சிறைச்சாலையின் உயர்பாதுகாப்புப் பிரிவில் தற்போது அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி போலீஸ் ஃபக்ருதீன் மிரட்டுவதாக சிறை அதிகாரிகள் புழல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 


போலீஸ் ஃபக்ருதீன், காஜா மொய்தீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அப்துல் ஷமீம் மற்றும் நவாஸ் ஆகியோர் சிறையிலிருந்து நீதிமன்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தப்பிக்க திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதனிடையே கோவை மத்திய சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆசிப் முஸ்தீன் மற்றும் அப்துல் ஷமிம். இவர்கள் எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இவர்கள் சிறை அதிகாரிகளைத் தாக்கி சிறையிலிருந்து தப்பிக்க முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.