தொடரும் போதைப்பொருட்கள் நடமாட்டம்

தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு மோசமாகி வருவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழக காவல்துறையும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு சோதனைகளிலும் இறங்கியது. இருந்த போதும் பல இடங்களில் இளம்வயதினர் அதிகளவு போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்த பல நகரங்களில் கஞ்சா செடிகளை அழிக்க தொடர் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தேனியில் தனது வீட்டு தோட்டத்தில் சொட்டு நீர் பாசனம் மூலம் கஞ்சா செடியை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

Continues below advertisement

சொட்டு நீர் பாசனம்- 10 அடிக்கு வளர்ந்த கஞ்சா செடி

தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கராஜபுரம்,கல்லுருண்டான் சுனை பகுதியில் வசித்து வரும் தமிழன் என்பவர்,தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து,அதனை காய வைத்து உதிரியாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அவரது வீட்டு தோட்டத்தை பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது சுமார் பத்து அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததை கண்டு மிரண்டனர். இதனைத் தொடர்ந்து தோட்ட உரிமையாளரும், கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபருமான தமிழன் (56)என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அந்த வீட்டில் நடத்திய தொடர் சோதனையில்,வீட்டில் வளர்த்த கஞ்சா செடிகளில் இருந்து பறித்து,காய வைக்கப்பட்டு உதிரியாக விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தனது வீட்டு தோட்டத்தில்  சொட்டுநீர் பாசனம் அமைத்து,நீண்ட காலமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. அந்த கஞ்சாவை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு சில்லறை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

Continues below advertisement

கொலை வழக்கில் ஜாமின் வாங்கி கஞ்சா செடி வளர்ப்பு

இது தொடர்பாக கஞ்சா செடிகள் மற்றும் உதிரி கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்,தமிழன் மற்றும் வேறு நபர்கள் இதுபோல இது அப்பகுதிகளில் வேறு இடங்களில் கஞ்சா செடிகள் வளர்த்து வருகிறார்களா? என்று வனத்துறையினர் உதவியுடன் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவித்தனர். இதனிடையே கஞ்சா செடி வளர்த்தாக கைது செய்யப்பட்ட தமிழன் கடந்த ஆண்டு கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார். ல மாதங்களிலேயே ஜாமினில் வெளியே வந்து கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. தமிழன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.