கோவையில் மாணவியை நிர்வாணமாக நிற்க வைத்து மிரட்டி சிறுவன் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கோவை மாவட்டம் கோவிலம்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பில் உடன் படித்த மாணவர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த மாணவர் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டார். அதன்பின் மாணவிடம் செல்ஃபோன் மூலம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. 


மேலும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியதால் மாணவியும் அதனை நம்பி பேசி வந்துள்ளார். நாளடைவில் போனில் மட்டுமே பேசி வந்த அவர்களின் காதல் வீடியோ கால் மூலம் விரிவடைய தொடங்கியது. இதனையடுத்து மாணவியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக சிறுவன் கூறியுள்ளார்.முதலில் மறுத்த மாணவி ஒருகட்டத்தில் தொல்லை தாங்காமல் நிர்வாணமாக வீடியோ கால் பேசியுள்ளார். இதனை அச்சிறுவன் செல்போனில் ரெக்கார்ட் செய்துக் கொண்டுள்ளார். இதுபற்றி எதுவும் அறியாத அச்சிறுமி  சிறுவனிடம் தொடர்ந்து பேசியுள்ளார். 


சில நாட்கள் கழித்து மீண்டும் ஒருநாள் நிர்வாணமாக பேசுமாறு அச்சிறுவன் கூறியுள்ளான். ஆனால் அந்த மாணவி மறுக்கவே ஆத்திரமடைந்த சிறுவன், ஏற்கனவே நீ நிர்வாணமாக நின்றதை நான் வீடியோவாக ரெக்கார்ட் செய்துள்ளேன். இப்போது நீ அப்படி வரவில்லை என்றால் உனது பெற்றோருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியதோடு அந்த நிர்வாண வீடியோவையும் மாணவியின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். 


இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி நிலைமை விபரீதமாவதை அறிந்து தனது பெற்றோரிடம் இந்த பிரச்சனை குறித்து கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மகளை கண்டித்த பெற்றோர் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் புகாரளித்தனர். . அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுவன் எந்த ஊர் என கூட தெரியாமல் பேசியது தெரிய வந்தது. அதனால் சிறுவன் எந்த ஊர் என்பதை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ள போலீசார் போக்சோ வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண