திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே பப்ஜி மோகத்தால் 11-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை  செய்துக்கொண்டது அந்த பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவர்கள் ஆன்லைன் கேம்களுக்கு அதிக அளவில் அடிமையாகி வருகிறார்கள். இதனால் அவர்களின் வாழக்கை அழியும் நிலைக்கு சென்றுவிடுகிறது.  தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் பல்வேறு கட்டுபாடுகளுடன் ஊரடங்கை மாநில அரசு பிறப்பித்தது. குறிப்பாக தமிழகத்தில்  பள்ளி, கல்லூரிகள் திறக்கபடாத சூழ்நிலை நிகழ்ந்து வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லையன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகிறார்கள். இதனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் , பெற்றோர்கள் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் சில மாணவர்கள் தொலைபேசிக்கு அடிமையாகி விடுகிறார்கள். இதன் காரணமாக ஆன்லைன் வகுப்புகளை முடித்த பிறகு சமூக வலைதளம் சென்று தேவையற்ற படங்களை பார்ப்பது, கேம் விளையாடுவது என பெரும்பாலான மாணவர்கள் அடிமையாகி விடுகிறார்கள்.




குறிப்பாக ஆன்லைன் கேமின் மீது உள்ள மோகத்தால்  அதிக அளவில் மாணவர்கள் சில தவறான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இவற்றை முற்றிலும் கட்டுபடுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதன்படி ஆன்லைன் கேம் பப்ஜி, போன்ற விளையாட்டிற்கு  தடைவிதிக்கபட்டது. மேலும் சமூக வலைதளங்களில் ஆபாசபடம் பார்பது என தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாநில அரசு, காவல்துறை இணைந்து பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். ஆனால் தற்போது மீண்டும் மாணவர்கள் ஆன்லைன் கேமிற்கு அடிமையாகமல் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சி மாவட்டம்,  சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்தாபுரம் ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர்,இவர் பருப்பு கார தெருவில், லாலா மிட்டாய் கடை எனும் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். இவரின் மகன் பாலஹரிநாத் காட்டூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.




கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வீட்டில் இருந்த பாலஹரிநாத் அதிகமாக  பப்ஜி எனும் விளையாட்டு கேம்மினை டவுன்லோட் செய்து விளையாட தொடங்கியுள்ளார். மேலும்  தற்போது வௌியான ரிசல்ட்டில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், பாலஹரி நாத்தின் தந்தை சங்கர் படிப்பதற்காக கொடுக்கப்பட்ட 5 GP நெட் முழுவதும் பப்ஜி விளையாட்டால் தீர்ந்ததால் அவரை  கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாலஹரிநாத் தனது அறைக்கு சென்று தாழிட்டு கொண்டுள்ளார். நேற்று மதியம் சாப்பிடவும் வௌியில் வராததால் பெற்றோர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் கதவை தட்டி அழைத்தபோதும்  எந்தவித சத்தமும்  இல்லாத காரணத்தால் அச்சமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாலஹரிநாத் துாக்கில் தற்கொலை செய்து கொண்டதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சோமரசம்பேட்டை காவல்துறையினர்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர்  உடலை கைப்பற்றினர். மேலும் பெற்றோர்கள் கண்டித்ததால்தான் மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை வேறு காரணம் உள்ளதா என காவல்துறை  விசாரணை நடத்தி வருகின்றனர். 


 மேலும் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050