சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கல்யாணி. இவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது 17 வயது மகளை காதலிப்பதாக கூறி, பரத் என்ற வாலிபர் கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்தார். தனது பெண்ணை மீட்டு தரக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். கடந்த 16 ஆம் தேதி புகார் அளித்த நிலையில் 20 நாட்களுக்கு மேலாகியும் தனது மகளை மீட்டுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். தனது மகளை உரிய நடவடிக்கை எடுத்து மீட்டு தரவேண்டும் என்று கோரிக்கையை பெற்றோர் வைத்துள்ளனர்.


 


இதனிடையே செல்போனில் சிறுமி பேசும் ஆடியோவை ஆதாரமாக வெளியிட்டுள்ளனர். அந்த ஆடியோவில் நான் செல்லவில்லை, தன்னை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும், வேலைக்கு சென்ற இடத்தில் பரத் நின்று கொண்டிருந்ததாகவும், தன்னை அழைத்து சென்று நிலையில் கேட்டால் அடித்ததாகவும் கூறுகிறார். பரத்திடம் செல்போனை கொடுத்தால் யாரிடமும் பேச மறுப்பதாக சிறுமி பேசும் உரையாடல் வெளியாகி உள்ளது. தன்னை அழைத்துச் செல்வதற்கு வருவார்களா? என்று கேள்வி எழுப்புகிறார். யாரையாவது வர சொல்லுங்கள். நிவாஸ் என்ற சிறுமியின் சகோதரரை அழைத்து செல்ல வரச்சொல்லி சிறுமி பேசுகிறார். பரத் என்பவர் செல்போனை கொடுக்கும்போது வாங்க மறுக்கிறார் சிறுமி பேசும் உரையாடல் வெளியாகியுள்ளது. 


அப்போது மகளை அழைத்து வந்து விட்டு விட்டு செல்லுமாறு பெற்றோர்கள் கூறும்போது, உன் பிள்ளை தான் தானாக வருவதாகவும், தற்பொழுது அழுந்து டிராமா போடுவதாக வாலிபர் பேசுகிறார்.


அப்பொழுது சிறுமியின் உறவினர்கள் எந்த இடத்திற்கு செல்வீர்கள் என்று கேட்கிறார். நாங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு என்ன? என்று பேசுகிறார். நீங்கள் என்ன பேசினாலும் நாங்கள் வரப்போவதில்லை என்று வாலிபர் கூறினர்.


 


இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், தனது 17 வயது மகள் சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள கடையில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 16ஆம் தேதி வீட்டிலிருந்து வேலைக்கு சென்றார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து தொலைபேசியில் அழைத்தார். அப்போது தன்னை பரத் என்ற வாலிபன் கூட்டிச் செல்வதாக கூறியுள்ளார். இதனை அடுத்து, சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து கொண்ட காவல்துறை 20 நாள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மகளை அழைத்துச் சென்ற பரத் வீட்டிற்கு சென்று பார்த்தல் அவர்களது வீடு பூட்டு போட்ட நிலையில் உள்ளது. அவர்களது உறவினர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ​எனது குழந்தையை காவல்துறையினர் விரைந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்