திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ளது அ.கலையமுத்தூர் ஊராட்சி. இங்குள்ள மண்டைக்காடு பகுதியில் வீடுகளிலிருந்து கொட்டப்படும் கழிவுகளை போடும் குப்பை தொட்டி ஒன்றில் இன்று பிற்பகலில் நாய்கள் ஏதோஒன்றை வெகுநேரமாக கடித்து இழுத்து கொண்டிருந்தன. அதை பார்த்த அப்பகுதி மக்கள் அருகே சென்று பார்த்த போது பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடல் என்பது தெரியவந்தது.


Anbil Mahesh Poyyamozhi : அரசுப் பள்ளிகளில் என்னென்ன வசதிகள்? : பட்டியலிட்டு கோரிக்கைவிடுத்த அமைச்சர் அன்பில்‌ மகேஸ்..




மேலும் படிக்க: Governor RN Ravi Speech : ”இந்தியாவை உருவாக்கியது சனாதனம்தான்.. அரசர்களும், ராணுவ வீரர்களும் அல்ல” : ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு..


இதனையடுத்து நாய்களை விரட்டிவிட்டு பார்த்தபோது பெண்  குழந்தை என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பழனி தாலுகா போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிறந்து சிலநாட்களே ஆன குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசியதுயார்? அதன் பெற்றோர் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண