மேலும் அறிய

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு முயற்சி: ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கைது!

போலி ஆவணம் தயாரித்து , அதன் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கைது செய்யப்ப்பட்டுள்ளார்.

போலி ஆவணம் தயாரித்து , அதன் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கைது செய்யப்ப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் உள்ளது ஊஞ்சம்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு சங்கராபுரத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வாங்குவதற்காக கடந்த 2020ம் ஆண்டு பெரியகுலத்தைச் சேர்ந்த சந்தனபாண்டியன் முன்வந்துள்ளார். இருவரும் பேசிக் கொண்டதன் அடிப்படையில் நிலத்தை வாங்க சந்திரசேகரனிடம், சந்தனபாண்டியன் ரூ.1 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டுள்ளார்.

ஆனால், ஒப்பந்தம் படி, சந்திரசேகரன் உரிய காலத்தில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரவில்லை. பத்திரப்பதிவை இழுத்தடித்து வந்ததால், சந்தனபாண்டியன் தான் கொடுத்த முன்பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். சந்தனபாண்டியன் தான் கொடுத்த முன்பணம் ரூ. லட்சத்தைப் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. 

பணம் பெற்றுக் கொண்டதோடு சந்தனப்பாண்டியன் நிற்கவில்லை. அந்த நிலத்தை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அப்போது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றிய மணவாளனுடன் இது குறித்துப் பேசியுள்ளார். மணவாளன் மற்றும் சந்தனபாண்டியன் ஆகியோர் சந்திரசேகரனின் நிலத்தை அபகரிக்க போலி ஆவணம் தயாரித்துள்ளனர்.

அதன்படி சந்திரசேகரன் சந்தனப்பாண்டியனிடம் நிலம் விற்றதாகவும் அதற்காக சந்திரசேகரன் தன்னிடம் இருந்து ரூ.1.5 (ஒன்றரை கோடி) வாங்கியதாகவும் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. 
இதனையறிந்த சந்திரசேகரன் அதிர்ந்து போனார். இந்த ஆவணம் போலி என்றும் தனது நிலத்தை மணவாளன் மற்றும் சந்தனபாண்டியன் ஆகியோர் அபகரிக்க முயல்வதாக கடந்த ஆண்டு தேனி மாவட்ட குற்ற தடுப்புப் பிரிவில் சந்திரசேகரன் புகார் அளித்தார்.

இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியராக வரும் மணவாளனை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். 

நில அபகரிப்புப் புகாரில் மண்டல துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆண்டிபட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் நில அபகரிப்பு நடைபெறுகிறது. தனி நபர்கள் மற்றவர்களின் நிலங்களை அபகரித்து தங்கள் பெயருக்கு மாற்றி பதிவு செய்து வருகின்றனர். ஆந்திர பிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத் மாநிலங்களில் நில அபகரிப்பை தடுக்க தனிச்சட்டம் உள்ளது. இதே போல் தமிழகத்திலும் நில அபகரிப்பு தடுப்பு சட்டம் என்பது தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

நில அபகரிப்பு தமிழகத்தில் பெருமளவு அதிகரித்து வருகிறது. எனவே பிற மாநிலங்களை போல நில அபகரிப்பு தடுப்பு சட்டம் தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் நிலம் அபகரிப்பு செய்யும் நபர்களிடம் இருந்து நிலத்தை காப்பாற்ற முடியும் என்ற கோரிக்கையுடன் எண்ணற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Lok Sabha Election LIVE :  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை - வாக்களிக்காமல் வேதனையோடு திரும்பிச் சென்ற நடிகர் சூரி!
TN Lok Sabha Election LIVE : வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை - வாக்களிக்காமல் வேதனையோடு திரும்பிச் சென்ற நடிகர் சூரி!
Kushboo:
Kushboo: "Vote4INDIA" இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டாரா நடிகை குஷ்பு? பேரதிர்ச்சியில் பா.ஜ.க.!
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Aditi Shankar Casts Vote : குடும்பத்துடன் வாக்குப்பதிவு..மகள் அதிதியுடன் சங்கர்!Mansoor Ali Khan : ”சின்னம் இருட்டுல இருக்கு! லைட்டை போடுங்கப்பா” புலம்பிய மன்சூர்Lok Sabha Elections 2024  : நட்சத்திரங்களின் வாக்குப்பதிவு..த்ரிஷா முதல் சூர்யா வரை!Vijay casts vote  : அதிரடி கிளப்பட்டுமா... வாக்களிக்க வந்த விஜய்! சுற்றி வளைத்த ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Lok Sabha Election LIVE :  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை - வாக்களிக்காமல் வேதனையோடு திரும்பிச் சென்ற நடிகர் சூரி!
TN Lok Sabha Election LIVE : வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை - வாக்களிக்காமல் வேதனையோடு திரும்பிச் சென்ற நடிகர் சூரி!
Kushboo:
Kushboo: "Vote4INDIA" இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டாரா நடிகை குஷ்பு? பேரதிர்ச்சியில் பா.ஜ.க.!
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Nainar Nagendran: தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
Manipur Firing: வாக்குச்சாவடியில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள்.. மணிப்பூரில் தொடர் பதற்றம்!
வாக்குச்சாவடியில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள்.. மணிப்பூரில் தொடர் பதற்றம்!
Tamil Nadu Election 2024: இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - ஜோதிமணி நம்பிக்கை
இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - ஜோதிமணி நம்பிக்கை
Embed widget