மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கஞ்சா விற்பனை குறித்து பல புகார்கள் வந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில் சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கஞ்சா விற்பனை குறித்து சோதனையில் ஈடுபட்டனர். 




அப்பொழுது சந்தேகத்தின் பேரில் சீர்காழி புறவழிச் சாலையில் சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து காரில் இருந்தவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சிதம்பரத்தை சிதம்பரத்தை சேர்ந்த கஞ்சா மொத்த வியாபாரியான மனோஜ் என்பது தெரியவந்தது. இதனை எடுத்து காரில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர் அளித்த தகவலின் பேரில் சில்லறை விற்பனைகள் ஈடுபட்டிருந்த சீர்காழியை கஞ்சா வியாபாரிகளான தேவேந்திரன், ராஜா, ஆதிகேசவன், அவினாஷ், வினோத் உள்ளிட்ட 9 பேரை அதிரடியாக கைது செய்தனர். 






சீர்காழி சுற்று வட்டார பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில் மூன்று  சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து ஐந்து கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை நேரில் பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கஞ்சா வேட்டையில் ஈடுபட்ட சீர்காழி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட தனி படையினருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் நிஷா கூறியதாவது:




சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்துவதற்காக இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தற்போது வரை 9 பேர் கைது செய்யப்பட்டு ஐந்து கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை தொடர்ந்து நடைபெறும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பதற்காக பிரத்தியோக  whatsapp எண் (9442626792) அறிவிக்கப்பட்டுள்ளது.




அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண் 04364 211600  என்கிற எண்ணிலும் தொடர்பு கொண்டு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவரின் பற்றிய விபரம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு மாவட்டத்தில் 56 பேர் குண்டர் காவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  60 கஞ்சா விற்பனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட சாராயம் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டதாக 3284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,420 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற