ஒரு 26 வயது பெண், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கடன் மீட்பு முகவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அந்த முகவர் அந்தப் பெண்ணின் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு வெளிப்படையான பாலியல் செய்திகளை அனுப்பியதாகவும், ஆபாசமான புகைப்படங்களை மார்பிங் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அந்தப் பெண், தான் எந்தக் கடனும் வாங்கவில்லை, ஆனால் இன்னும் முகவர்களால் துன்புறுத்தப்படுவதாகக் கூறினார்.


எஃப்.ஐ.ஆரில், அந்தப் பெண் தான் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவருடைய வருங்கால கணவர் அவருடைய செலவுகளை கவனித்துக்கொள்கிறார், ஆனால் அவருக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக அவர் சொன்னதை அடுத்து கடந்த மாதம் யூடியூப்பில் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​கடன் செயலிக்கான விளம்பரத்தைப் பார்த்துள்ளார். பிறகு அவர் ஆப்ஸ் இணைப்பைக் கிளிக் செய்ததாகவும், செயலியை போனில் நிறுவியதாகவும் கூறினார். அவ்வாறு செய்யும்போது, ​​தனது தொடர்புப் பட்டியல் மற்றும் கேலரியை அணுக பயன்பாட்டிற்கு அனுமதி அளித்தார்.


இருப்பினும், ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்ததாகவும், கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.இதை அடுத்து அவர் அந்த அப்ளிகேஷனை அன் இன்ஸ்டால் செய்துள்ளார். இருப்பினும், விரைவில் முன்பின் தெரியாத எண்ணிலிருந்து வெளிப்படையான பாலியல் 
 மிரட்டல்கள் வரத் தொடங்கியதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார், அந்தப் பெண்ணையும் அவரது தாயையும் "கடனைத் திருப்பித் தராத பாலியல் தொழிலாளர்கள்" என்று அந்த நபர் அழைத்துள்ளார்.




அதே செய்தி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தான் வேலை பார்த்த முன்னாள் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு வெவ்வேறு மொபைல் போன் எண்களில் இருந்து அனுப்பப்பட்டதாக அந்த பெண் கூறினார்.


புகாரின்படி, கடன் செயலி முகவர்கள் பெண், அவரது சகோதரி மற்றும் அவரது நண்பரின் புகைப்படங்களை ஆபாசமான படங்களுடன் மார்பிங் செய்து, அவரது தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு அனுப்பியுள்ளனர். இதை அடுத்து இதனால் மிகவும் பயந்து போன அவர் காவல்துறையை நாட முடிவு செய்ததாக அந்தப் பெண் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண