நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து, மகன் வேல்ராஜ் (29). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்ததால் வேல்ராஜின் மனைவி தூத்துக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை பார்ப்பதற்காக வேல்ராஜ் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். பின்னர் இரவில் தனது தந்தையிடம் போன் செய்து சமாதானப்புரத்திற்கு வந்து பேருந்தில் இறங்குவதாக கூறியுள்ளார். அவரை அழைத்து செல்வதற்காக இசக்கிமுத்து சமாதானப்புரத்திற்கு வந்துள்ளார்.
ஆனால் வெகு நேரம் ஆகியும் வேல்ராஜ் வரவில்லை. இதையடுத்து இசக்கிமுத்து போன் செய்தபோது கேட்ட போது, தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டுவதாக கூறிய நிலையில், ரூ.15 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். பணத்தை கொடுத்தால் தான் என்னை விடுவார்களாம் என்று தந்தையிடம் கூறியதால் பதறிய தந்தை இசக்கிமுத்து, இதனால் அதிர்ச்சி அடைந்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் வேல்ராஜ் செல்போன் சிக்னலை தொடர்பு கொண்ட போது அது ஊருடையார்புரம் பகுதியை காட்டி உள்ளது. உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அங்கு சென்று பார்த்த போது வேல்ராஜ் உள்பட மூன்று பேர் அங்கு இருந்துள்ளனர்.
அவர்களிடம் போலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது வேல்ராஜ் தனது நண்பர்களிடம் குறைந்த விலைக்கு நகை வருவதாகவும், அதை வாங்கி விற்றுவிட்டு அதில் வரும் கமிஷன் தொகையை பிரித்து கொள்வோம் என்று கூறியதோடு நகையை வாங்க முன் பணமாக ஒரு லட்ச ரூபாய் வேண்டும் என்று நண்பர்களிடம் வாங்கியுள்ளார். அதனை நம்பி நண்பர்களும் பணத்தை கொடுக்க அந்த பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி கொடுக்காமல் வேல்ராஜ் கோவா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்று பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே பணத்தை கொடுத்த நண்பர்கள் வேல்ராஜிடம் திருப்பி கேட்டுள்ளனர். அவர்களுக்கு கொடுக்க பணம் இல்லாத நிலையில் நாடகமொன்றை ஆடி உள்ளார். மேலும் பணம் கிடைத்ததும் அவர்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டு, உல்லாசமாக ஊர் சுற்றுவதற்கும் முடிவு செய்த வேல்ராஜ் தனது தந்தையிடம் தன்னை ஒரு கும்பல் கடத்தி விட்டதாக நாடகமாடி ரூ.15 லட்சம் கேட்டது தெரிய வந்ததுள்ளது. இது குறித்து வேல்ராஜ் மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். வாங்கிய பணத்தை கொடுக்கவும், உல்லாசமாக வாழவும் முடிவு செய்த மகன் பெற்ற தந்தையிடமே கடத்தல் நாடகமாடி 15 லட்சம் பணத்தை கேட்ட சம்பவம் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்