நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கு சோதனை சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான மதுபான கூடம் இயங்கி வருகிறது. இந்த மதுபான கூடத்திலிருந்து ஆண்டுதோறும் அரசுக்கு வரியாக கட்டணம் செலுத்தப்படுவது உண்டு. இந்த நிலையில் அதற்கான உரிமம் புதுப்பிக்கப்படாமல் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.  அப்புகாரின் பேரில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக வள்ளியூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் யோகேஷ் குமார் தலைமையிலான போலீஸ் படையினர் காவல்கிணறு மதுபான கூட்டத்திற்கு சென்று சோதனை நடத்தியதில் சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.


இதில் 670 லிட்டர் கொண்ட 1200க்கும் அதிகமான மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபான கூடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு சுமார் 4 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. தொடர்ந்து சட்டவிரோதமாக முறையான உரிமம் பெறாமல் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்த செம்புலிங்கபுரத்தை சேர்ந்த சுதாகர் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த குரகன் தப்பா ஆகிய இருவரும் தப்பியோடிய நிலையில் அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.




நெல்லை தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் சங்கரநாராயணன்  தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பர்க்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்று பார்த்தபோது மேலப்பாளையம், சிவராஜபுரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது (24), மற்றும் 2 இளஞ்சிறார்கள் ஆகியோர் சேர்ந்து சட்டவிரோதமாக பள்ளி மாணவர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சாகுல் ஹமீதை கைது செய்தும், 2 இளஞ்சிறார்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 60 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண