Neet Exam Crime: நீட் தேர்வு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கான்பூரில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 ஆசிரியர்கள் கைது:
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதற்காக கான்பூர் பயிற்சி மையத்தில் இணைந்த சிறுமி, அந்த பயிற்சி மையத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த கொடூரம் சில மாதங்களுக்கு நீடித்ததாகவும் கூறப்படுகிறது.
மாணவிக்கு நடந்தது என்ன?
2022 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்குத் தயாராவதற்காக கான்பூருக்குச் சென்ற மாணவி, அங்குள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்ந்துள்ளார். அங்கு உயிரியல் ஆசிரியராக பணியாற்றி வந்த சாஹில் சித்திக் என்பவர், மாணவியை தனது வீட்டில் நடந்த விருந்துக்கு அழைத்து, இது அனைத்து மாணவர்களுக்குமான விருந்து என்று கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் ஆசிரியரின் வீட்டை அடைந்தபோது, அவள் மட்டும் அங்கு தனியாக இருப்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். தொடர்ந்து சித்திக் மதுபோதையில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, அந்தச் செயலை படம் பிடித்துள்ளார்.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவிடுவேன் எனவும், உனது குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டி, சித்திக் பல சந்தர்ப்பங்களில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியை அந்த ஆசிரியர் தனது குடியிருப்பில் சிறிது காலம் பிணைக் கைதியாக அடைத்து வைத்து இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் சில பார்டிகளில் பங்கேற்கும்படி கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். அது போன்ற ஒரு பார்ட்டியின் போது தான் 39 வயதான வேதியியல் ஆசிரியரான விகாஸ் போர்வால் என்பவராலும் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்தபோது, அந்த மாணவி மைனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவிக்கு கொலை மிரட்டல்:
ஹோலி பண்டிகையை ஒட்டி தனது பெற்றோரை சந்திக்க வீட்டிற்கு சென்ற மாணவியை, சித்திக் தொலைபேசியில் அழைத்து மீண்டும் தன்னிடம் வரும்படி அழைத்துள்ளார். ஆசைக்கு இணங்கவில்லை என்றால் குடும்பத்தினரை கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
சித்திக் மற்றொரு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் வீடியோ சமீபத்தில் வைரலானது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனால் மாணவிக்கு பயம் நீங்கி வியாழன் அன்று தாமாக முன்வந்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வெள்ளிக்கிழமை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டு, அதே இரவில் சித்திக் மற்றும் போர்வால் இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ALSO READ | Delhi Ganesh: "முனியாண்டி முதல் சிதம்பரம் வரை" காலத்தால் அழியாத டெல்லி கணேஷ் கதாபாத்திரங்கள்!