பிரபல வங்கதேச நடிகரை விருந்து நிகழ்ச்சியில் சுட்டுக்கொலை செய்த நபரை 24 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றி வளைத்து போலீசா கைது செய்துள்ளனர்


சோஹல் சவுத்ரி..


வங்க தேசத்தில் 90களில் பிரபல நடிகராக வலம்வந்தவர்  சோஹல் சவுத்ரி. தொழில் போட்டி, சினிமா வளர்ச்சி என பல்வேறு காரணங்களால் குறி வைக்கப்பட்ட சோஹல் சவுத்ரி 1998ம் ஆண்டு டிசம்பரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ட்ரம்ப்ஸ் க்ளப்பில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் சோஹல் கலந்துகொண்டார். அப்போது அவரை சுற்றிவளைத்த ஒரு கும்பல் சுட்டுக்கொலை செய்தது. மிகப்பெரிய பரபரப்பு சம்பவமாக நடந்த இந்த கொலையில் 9 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். தொழில் அதிபர் அஜீஸ் முகமது, ஆஷீஷ் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனாலும் அந்தக்கொலை வழக்கில் இருந்து இருவர் தலைமறைவாகினர். அதில் ஒருவர்தான் ஆஷீஷ்ராய் சவுத்ரி. தொழிலதிபரான ஆஷீஷ்ராயை போலீசார் சல்லடைப் போட்டு தேடினர்.




சட்டை காலரில் கட்டை கட்டையாக போதைப்பொருள்... முக்கிய குற்றவாளிகளை சுற்றிவளைத்த சுங்கத்துறை!






தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனாலும் அவர் சிக்கவில்லை. போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு தப்பிச்சென்ற ஆஷீஷ்ராய் அதன்பின்னர் போலீசார் கண்ணில் சிக்கவே இல்லை.தொழிலதிபராக இருந்த ஆஷீஷ்ராய்  அதன்பின்னர் நிழல் உலக தாதாவாகவே மாறினார். பல்வேறு இடங்களிலும் தன்னுடைய தொழிலை பெருக்கியுள்ளார். ஆனாலும் அவரை  தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் அவரைப்பிடிக்க கட்டம் கட்டியுள்ளனர். அப்போதுதான் போலி பாஸ்போர்ட் மூலம் வங்கதேசத்துக்குள் மீண்டும் நுழைந்துள்ளார் ஆஷீஷ்ராய். 


அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  பதுங்கி இருந்த ஆஷீஷ்ராய் வீடு முழுக்க வெளிநாடு மதுபானத்தை வைத்துக்கொண்டு, துணைக்கு இரண்டு பெண்களை வைத்துக்கொண்டும் நாட்களை கொண்டாடியுள்ளார். அனைத்தையும் அங்குலம் அங்குலமாக கவனித்த போலீசார் திடீரென ஒருநாள் அந்த குடியிருப்பையே சுற்றி வளைத்தனர். படபடவென துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்த போலீசார் ஆஷீஷ்ராயை கைது செய்தனர்.




Robbery: பூட்டி இருக்கும் வீடுகள்தான் டார்கெட்.. வீட்டில் சமைத்து சாப்பிட்டு, மது குடித்துவிட்டு திருடிச்சென்ற கும்பல் கைது..




ஜாமின்..


சுற்றிவளைத்த போலீசாரிடம் தான் ஏற்கெனவே ஜாமின் வாங்கிவிட்டதாக வாக்குவாதம் செய்துள்ளார் ஆஷீஷ்ராய். 24 வருடங்களுக்கு முன்பு பெற்ற ஜாமின் எல்லாம் காலாவதி ஆகிவிட்டதாகக் கூறி ஆஷீஷ்ராயை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண