நாமக்கல் வெல்ல ஆலை கொட்டகைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த சம்பவத்தில் 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


 




நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் தூங்கி கொண்டிருந்த 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். ராஜேஷ் (19), சுகிராம் (28), எஸ்வந்த் (18), கோகுல் (23) ஆகிய 4 தொழிலாளர்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 


 




இந்த நிலையில், தீ விபத்தில் காயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் 4 வடமாநில தொழிலாளர்களில் ஒடிசாவை சேர்ந்த 19 வயது இளைஞர் ராஜேஷ் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.


 


மேலும், கரூர் அருகே சோக சம்பவம் நடந்துள்ளது. மின்சாரம் பாய்ந்து விவசாயி பரிதாபமாக இறந்தார். கரூர் மன்மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட சோமுர் அருகே உள்ள செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி விவசாயி. இவர் சோமுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் ஒயரில் முத்துசாமியின் கால் பட்டது. மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட முத்துச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண