ஹைதராபாத்தில் கே.பி. ஆர் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நடிகை லாலு சவுரேசியாவைத் தாக்கியதோடு அவரிடம் இருந்த பணம், மொபைல் போன் உள்ளிட்டவற்றைப்பறித்து சென்ற சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சமீப காலங்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைக்கட்டுக்குள் கொண்டுவரவும், யார் இதுப்போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என தெரிந்துக்கொள்வதற்காகவே கோவில்கள், சாலைகள், பூங்காக்கள் போன்ற மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய பொதுஇடங்களில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறியும் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பது அதிர்ச்சியைத் தான் ஏற்படுத்துகிறது. சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் பல பிரபலங்களும் இதுப்போன்று குற்றச்சம்பவங்களினால் பாதிக்கப்படுவது என்பது தற்போது நிகழ்ந்துவருகிறது.
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கே.பி. ஆர் பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். இங்கு எப்போதுமே முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நடைப்பயிற்சி செல்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் நடிகை ஷாலு சென்ற தினம் அன்று அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயற்சித்துள்ளார். ஆனால் மர்ம நபரைத் தாக்கி அங்கிருந்து தப்பிப்பதற்கு முயற்சி செய்துள்ளார் நடிகை ஷாலு. மேலும் அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து தலையில் அடிக்கவும் முயற்சி செய்துள்ளார். இருந்தப்போதும் நடிகையை தாக்கிவிட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இதில் நடிகைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவம் நடந்த நாள் அன்றே பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
நடிகையை தாக்கிய மர்ம நபர் யார் என்பது குறித்து அறிந்துக்கொள்ளும் முயற்சிக்கும் போது தான் காவல்துறையினர் ஆய்வு செய்ததில் சம்பவம் நடந்த கே.பி.ஆர் பூங்காவில் இருந்த சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து போலீசார் பார்க்கிற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து திருடனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். பொது இடத்தில் மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பிரபலங்கள் அதிகம் உபயோகிக்கும் இந்த பார்க்கினைப்பற்றி மிகவும் அறிந்த நபர்கள் தான்இதுப்போன்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற கோணத்திலும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. தெலுங்கு நடிகையான ஷாலு, தமிழில் என் காதலி சீன் போடுறா’ மற்றும் தெலுங்கில் O Pilla Nee Valla மற்றும் Bhagya Nagara Veedullo Gammatthu போன்ற படங்களில் நடித்துள்ளார்.