மேலும் அறிய

Madurai Murder: அதிமுக நிர்வாகி..! மைனர் பாய்ஸை வைத்து ஸ்கெட்ச் போட்ட மனைவி - கொடூர கொலை, லிஸ்டில் 7 பேர்

Madurai ADMK Cadre Murder: மதுரையில் தகாத உறவு காரணமாக அதிமுக நிர்வாகியை மனைவியே திட்டமிட்டு காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

Madurai ADMK Cadre Murder: மதுரையில் அதிமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டு சிறார்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனைவி உட்பட 7 பேர் கைது

மதுரையில் அதிமுக நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி மற்றும் இரண்டு சிறார்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாம்நத்தம் கிராமத்தில் தேநீர் கடை நடத்தி வந்த தனசேகர பாண்டியன் என்பவர், வழக்கம்போல கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை 5.30 மணியளவில் கடையை திறக்கச் சென்றார். அப்போது அவரை சூழந்த 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் தனசேகர பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர்.

2 சிறார்கள் கைது..

கொலை செய்யப்பட்ட நாளன்றே சந்தேகத்தின் அடிப்படையில் மாதவன் (22) மற்றும் இரண்டு சிறார்கள் (16,17) என மூன்று பேரை போலீசார் கைது செய்தவர். அவர்களிடமிருந்து பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 4 பேரை கைது செய்துள்ளனர். அதில் தனசேகர பாண்டியனின் மனைவி காவியா (28), பேச்சிமுத்து (31), பாலாஜி (22), சஞ்சு (20) ஆகியோர் அடங்குவர். தீவிர விசாரணையில் காவியா மற்றும் பேச்சிமுத்து ஆகியோர் திருமணத்தை மீறிய தகாத உறவில் இருந்ததும், அவர்கள் இருவரும் சேர்ந்து படுகொலையை திட்டமிட்டு நிகழ்த்தியதும் தெரிய வந்துள்ளது.

கொலைக்கான காரணம் என்ன?

பள்ளி பருவத்தில் இருந்தே பேச்சிமுத்து உடன் பழகிவந்த காவிய, திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பிறகு, அவருடனான பழகத்தை தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே சண்டை வெடித்துள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக காதலனுடன் காவியா வீட்டை விட்டும் வெளியேறியுள்ளார். ஆனால், குடும்பத்தினர் சேர்ந்து அவரை அழைத்து வந்து மீண்டும் கணவனுடன் வாழவைத்துள்ளனர். அதன் பிறகும் கூட காவியா தனது காதலனுடன் தொடர்பில் இருப்பது தெரிய வர, தனசேகர பாண்டியன் மனைவியுடன் சண்டை போட்டு தாக்கியுள்ளார். 

இதனால் கோபம் கொண்டு அவனியாபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கும், மகளின் தகாத உறவு குறித்து அறிந்த தந்தையும் காவியாவை திட்டி, அடித்துள்ளார்.  இதுகுறித்து தனது காதலனுடன் தொலைபேசியில் பேசி அழுதுள்ளார். இதன் விளைவாக தனசேகர பாண்டியனை கொலை செய்துவிடலாமென திட்டமிட்டுள்ளனர்.

திட்டமிட்டு படுகொலை..

கொலை செய்ய முடிவு செய்த பிறகு, தனசேகர பாண்டியனின் நடவடிக்கைகளை கடந்த 10 நாட்களாக பேச்சிமுத்து கவனித்து வந்துள்ளார். அதன்படி, காலையில் வேலைக்குச் செல்லும்போது கொலையை அரங்கேற்றினால், சாட்சியங்கள் ஏதுமின்றி பணியை செய்து முடித்துவிடலாம் என திட்டமிட்டுள்ளனர். அதன் விளைவாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடையை திறக்கச் சென்ற தனசேகர பாண்டியனை, சாமநத்தம் - நெடுங்குலம் மெயின் ரோட்டில், பேச்சிமுத்தால் ஏவப்பட்ட கூலிப்படை மறித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி பயங்கரம்: காதலை மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!
புதுச்சேரி பயங்கரம்: காதலை மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
மயிலாடுதுறை: தொடர் கஞ்சா விற்பனை - குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!
மயிலாடுதுறை: தொடர் கஞ்சா விற்பனை - குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
Embed widget