மும்பையில் கொடூரம்


டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது மற்றொரு சம்பவம் மும்பையில் அரகேறியுள்ளது.


மும்பை மகாராஷ்டிராவில் உள்ள மீரா ரோடு நகரில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் 32 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. 56 வயதான மனோஜ் சஹானி என்ற நபர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக 32 வயதான சரஸ்வதி வைத்யாவுடன் மீரா ரோடு பகுதியின் கீதா ஆகாஷ் டீப் கட்டிடத்தின் ஜே பிரிவில் உள்ள பிளாட் 704 ல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். 


இந்தநிலையில், மூடப்பட்ட குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரில் அடிப்படையில், நயநகர் காவல் நிலையத்தை சேர்ந்த ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை உடைத்தனர். இதன் காரணமாகவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சஹானி தனது குடியிருப்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 


பரபரப்பு வாக்குமூலம்


இந்நிலையில், கைது செய்யப்பட்ட மனோஜ் சஹானி போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, ”2015ஆம் ஆண்டு மார்க்கெட்டில் அகமத் சரஸ்வதி வைத்யாவை சந்தித்தேன். அவர் என்னிடம் தான் ஒரு அனாதை என்று கூறினார். இதனால் அவர் மீது இரக்கம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் இருவருமே சேர்ந்த வாழ முடிவு எடுத்தோம்.


கடந்த 5 ஆண்டுக்கு முன் மீரா ரோட்டில் உள்ள கீதா அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம். 2 ஆண்டுகளுக்கு கழித்து அதேபகுதியில் உள்ள கட்டிடத்தில் 7வது மாடியில் உள்ள வீட்டில் குடிபெயர்ந்தோம். சில நாட்கள் எங்களது வாழ்க்கை நன்றாக சென்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எனக்கு வேலை பறிப்போனது. இதனால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.


"ஷரத்தா கொலையை பார்த்து காப்பியடித்தேன்”


இது ஒரு பக்கம் இருக்கையில், சரஸ்வதிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாகவும் தன்னை ஏமாற்றி வருவதாகவும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவரிடம் பலமுறை கேட்டு சண்டையிட்டேன். ஒரு கட்டத்தில் சரஸ்வதியை கொலை செய்ய திட்டமிட்டேன். இதனால் அவரை கடுமையாக அடித்து உதைத்தில் இறந்துவிட்டாள். பின்னர், எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். அப்போது தான் எனக்கு டெல்லியில் காதலி ஷரத்தாவை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டியது நினைவுக்கு வந்தது. 


அதேபோல் நானும் சரஸ்வதியின் உடலை துண்டு துண்டாக வெட்டினேன். 20 துண்டுகளாக வெட்டியதும் அறை முழுவதும் ரத்தமாக இருந்தது. அந்த ரத்தத்தை வாளியில் தண்ணீர் எடுத்து கழுவினேன். மேலும், உடல் உறுப்புகளை சமைக்கும் குக்கரில் வேக வைத்தேன். குக்கரில் வேகவைத்த உடல் உறுப்புகளை எடுத்துச் சென்று நாய்களுக்கு உணவாக கொடுத்தேன். மற்ற உடல்பாகங்களை வேகவைத்து, வறுத்தேன்.  இதனின் துர்நாற்றம் வரக்கூடாது என்று எண்ணி ரூம் ஃபிரஷ்னரை பயன்படுத்தினேன். இருந்தாலும், துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகித்தனர்” என்று வாக்குமூலம் அளித்தார். 


வாந்தி எடுத்த காவல்துறை அதிகாரிகள்


இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றிருந்தனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்தபோது அறையை பார்த்து போலீசார் வாந்தி எடுத்ததாக தெரிகிறது. மேலும், சமையலறையில் இருந்த பாத்திரத்தில் வறுக்கப்பட்ட உடல் உறுப்புகள் துர்நாற்றம் வீசியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.