மும்பையின் பாந்த்ரா கிழக்கில் உள்ள பெஹ்ராம் நகரில் உள்ள முகமது ஹோட்டலில் இரவில் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹோட்டலில் ஒரு நபர் மற்றொரு நபரை கத்தியால் தாக்கும் காட்சிகள் சரியாக சிசிடிவியில் பதிவாகி வைரலாகி வருகிறது.

பரபரப்பான அந்த ஹோட்டலில், குற்றம் சாட்டப்பட்டவர் கத்தியால் பாதிக்கப்பட்டவரை மீண்டும் மீண்டும் தாக்குவதைக் காணலாம். சில நிமிடங்களில், ஊழியர்களும் மற்ற வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டவரை மீட்டனர்.

பிரிவுகள் 118(2), 351(2) மற்றும் 352-ன் கீழ் நிர்மல்நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துணை காவல் ஆணையர் மணீஷ் கன்வாலியா தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது கடுமையான காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவருக்கு தோள்பட்டைக்குக் கீழே காயம் ஏற்பட்டுள்ளது.