மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பாரபத்தி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்-நாச்சம்மாள் தம்பதி. இவர்ககளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். முருகன் வேலைக்கு சென்ற நிலையில் நாச்சியம்மாள் ஆடு மேய்க்க சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது மகன் மோகன் திடீரென மாயமானார். இதனையடுத்து மாலை வீடு திரும்பிய தாய் மற்றும் தந்தை மகனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

Continues below advertisement

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாயம்

இதனையடுத்து வேறு வழியில்லாமல் தந்தை முருகன் கூடக்கோவில் காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு பாரபத்தி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதே பகுதியை சேர்ந்த முருகனின் உறவினர் கிருஷ்ணனின் மகன் மணி (18) சாக்குமூட்டை ஒன்றை தூக்கி சென்றதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: எனக்கே துரோகம் பண்றியா? காதல் மனைவியை இதற்காக தான் கொலை செய்தேன்.. கணவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்

Continues below advertisement

குவாரியில் சிறுவன் உடல்

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மணியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதலில் மறுத்த மணி போலீசார் பாணியில் விசாரணை நடத்திய போது 4 வயது சிறுவன் மோகனை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்து குவாரி பள்ளத்தில் வீசியதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படையினர் மணியை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது சாக்கு மூட்டையில் கிடந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிர்ச்சி வாக்குமூலம்

இதனையடுத்து மணியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிறுவனின் தந்தை முருகன் குடும்பத்தினருக்கும் தங்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தனது பெரியப்பா மகளுக்கும் இறந்த சிறுவனின் சித்தபாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதனால் ஆத்திரத்தில் அவர்களை பழிவாங்கும் நோக்கில் முருகன் மகன் 4 வயது சிறுவன் மோகன் தனது வீட்டில் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது அவனை தனியாக அழைத்து சென்று தனது வீட்டின் பின்புறம் பயன்பாட்டிற்கு இல்லாத கழிப்பிடத்திற்கு கொண்டு சென்று சிறுவனை கீழே படுக்க வைத்து வாயை பொத்தி பிளேடால் கழுத்தை அறுத்து யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சிறுவனின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி தோளில் சுமந்து கொண்டு சென்று ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்குவாரியில் வீசியதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றதையும் ஏற்படுத்தியுள்ளது.