Crime: 16 வயது சிறுமியுடன் திருமணம், உடைந்த பாட்டிலால் 36 முறை: வீடியோ காலில் காதலி - கோர சம்பவம்

MP Crime: காதலனுடன் சேர்ந்து கணவனை கொடூரமான கொன்ற மைனர் சிறுமி உட்பட 3 பேரை கொலை செய்துள்ளனர்.

Continues below advertisement

MP Crime: உயிரிழந்த நபர் உடைந்த பாட்டிலால் 36 முறை குத்தப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கணவன் கொடூர கொலை:

மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் 25 வயது இளைஞன் ஒருவர் தனது மைனர் (18 வயதை பூர்த்தி செய்யாத) மனைவியால் அவரது காதலன் மற்றும் இரண்டு உதவியாளர்களின் உதவியுடன் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றத்திற்கு பின்பு தலைமறைவாக இருந்த நான்கு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதாகியுள்ள 16 வயது சிறுமியின் குடும்பத்தினர் மீது, குழந்தை திருமணம் வழக்கு பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். 

உடல் கண்டெடுப்பு

சிறுமிக்கும்,  ஷாபூர் நகரத்தைச் சேர்ந்த ராகுல் குமார் என்ற ராஜேந்திர பாண்டே என்பவருக்கும் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த  13 ஆம் தேதி, இந்தூர்-இச்சாபூர் நெடுஞ்சாலையில் உள்ள புர்ஹான்பூர் ஐடிஐ கல்லூரிக்கு அருகிலுள்ள புதரில் இருந்து ஒரு இளைஞனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அது ராகுல் குமார் என அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து மேற்கொண்ட தீவிர விசாரணையில்,  ராகுல் குமார் தனது மனைவியுடன் முந்தைய நாள் ஷாப்பிங் சென்றிருந்தது,  அவரும் காணாமல் போனதும் போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது.

சிறுமியின் காதல்..

காணாமல் போன அந்த சிறுமி குறித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சிறுமி மற்றும் அவரது காதலரான 23 வயது யுவராஜ் பாட்டீல் ஆகியோரால் இந்தக் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அமபலமாகியுள்ளது. அவர்களுக்கு லலித் பாட்டீல் மற்றும் மேலும் ஒரு மைனர் சிறுவன் ஆகிய இருவர் உதவி செய்ததும் தெரிய வந்துள்ளது. தனது விருப்பமில்லாமல் பெற்றோர் நிர்பந்தித்து இந்த திருமணத்தை சிறுமிக்கு செய்து வைத்துள்ளனர். ஆனால், திருமணத்திற்கு பிறகும் தனது காதலனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். மேலும், தங்களது உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்யவும் அந்த சிறுமியும், அவரது காதலரும் திட்டமிட்டுள்ளனர்.

நடந்தது என்ன?

சம்பவம் தொடர்பாக பேசிய போலீசார், “புர்ஹான்பூரில் ஷாப்பிங் செய்துவிட்டு திரும்பும்போது, ​​லலித்தும் அவரது மைனர் நண்பரும் இருசக்கர வாகனத்தில் தங்களை பின்தொடர்ந்து வருவதை சிறுமி கவனித்துள்ளார். தொப்டர்ந்து ஐடிஐ கல்லூரி அருகே வந்தபோது தனது காலணிகளை, சிறுமி வேண்டுமென்றே கழட்டி கீழே போட்டுள்ளார்.   கணவர் ராகுலை பைக்கை நிறுதுமாறி சிறுமி கூறியுள்ளார். அதைகேட்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு, சென்று காலணியை எடுத்துவருமாறு மனைவியிடம் கணவன் கூறியுள்ளார். அதற்குள் அங்கு வந்த லலித்தும் அவனது கூட்டாளியும் ராகுலை அடிக்கத் தொடங்கினர், அதே நேரத்தில் அந்தப் பெண்ணும் உடைந்த பீர் பாட்டிலால் கணவரை தாக்கியுள்ளார். அதோடு அந்த பாட்டிலால் சுமார் 36 முறை ராகுலை சரமாரியாக குத்தி, கொலை செய்து அருகிலுள்ள குழிக்குள் தள்ளியுள்ளனர். அதே இடத்தில் இருந்து அந்த சிறுமி தனது காதலனுக்கு வீடியோ கால் செய்து, உயிரிழந்த தனது கணவனின் உடலை காட்டியுள்ளார்” என தெரிவித்துளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த சிறுமி, அவரது காதலன், அவர்களுக்கு உதவிய 2 பேர் என மொத்தம் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola