மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான புலம்பெயர்ந்த தொழிலாளி கேரளாவின் கோட்டயத்தில் மைனர் சிறுமியை பாலியல் வன்முறை செய்து அதனால் அவர் கருவுற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித் ரஜோயர் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் சிறுமியின் உடன்பிறந்த 2 வயதுக் குழந்தையைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.


நமக்குக் கிடைத்த தகவலின்படி , குற்றம் சாட்டப்பட்டவர் கேரளாவில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார், ஆறு மாதங்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரம் பார்த்து அவர் வீட்டிற்குச் சென்று இந்த கொடூர காரியத்தைச் செய்துள்ளார்..


அவரது வீட்டை அடைந்த பிறகு, அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் 8 வயது சகோதரனை ஜூஸ் வாங்க அனுப்பியுள்ளார். பின்னர் அந்த மைனர் சிறுமியை சரமாரியாக தாக்கி, சிறுமி எதிர்த்ததால், அவரது 2 வயது சகோதரனின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


பயத்தில், சிறுமி எதுவும் செய்ய முடியாது சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் தனது சகோதரனை கொன்று விடுவேன் என அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.




அந்த நபர் பின்னர் பல சந்தர்ப்பங்களில் சிறுமியை இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளார். மேலும் சிறுமி பயத்தில் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளார். திடீரென வயிற்றில் வலி இருப்பதாக சிறுமி கூறியபோது, ​​பெற்றோர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். ​​அப்போது இவர் கருவுற்று இருப்பது தெரியவந்தது. அப்போது தான் தனக்கு நிகழ்ந்த முழு தாக்குதலையும் தன் தாயிடம் கூறினாள்.


இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் அக்கம்பக்கத்தை அடைந்ததும், குற்றவாளி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.


இதையடுத்து அவரது நடமாட்டத்தை போலீசார் கண்டுபிடித்து மேற்கு வங்கத்தில் இருந்து கைது செய்தனர். இதை அடுத்து தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


முன்னதாக, மற்றொரு செய்தியில், கேரளாவில் வெறிநாய்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், ஒருவர் துப்பாக்கியுடன் வலம் வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அவர் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு முன்னால் நடந்து செல்கிறார்.


மக்கள் வெளியில் வர முடியாத நிலை 


நம் ஊரில் நாய்கள் என்றால் பலருக்கும் பிடிக்கும், சினிமாவில், கதைகளில் எல்லாம் பல நாய்களை கண்டு ரசித்திருப்போம். நாமே பலர் நாய் மீது அன்புகொண்டு வீட்டில் வளர்ப்போம். ஆனால் அவற்றை சரியாக பராமரிக்காத பட்சத்தில், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது. கேரள மாநிலம் இது போன்ற பிரச்சினையை தான் எதிர்கொண்டு வருகிறது. கேரளா மாநிலத்தில் இந்த வருடம் மட்டும் வெறிநாய் கடியால் சுமார் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி நாய்களுக்குள் நோய் வேகமாக பரவி வருவதால் மக்கள் வெளியில் வர அச்சப்பட்டு வீட்டில் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. 


துப்பாக்கி ஏந்திய தந்தை


வெறிநாய்களை கட்டுப்படுத்த கேரள அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் நாய்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், இதற்கு எதிராக ஆயுதம் சிலர் ஆயுதம் ஏந்தியுள்ளனர். அதில் ஒரு விடியோ வைரல் ஆகி உள்ளது. வீடியோவில் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ஒருவர் துப்பாக்கியுடன் முன்னே செல்ல பள்ளி மாணவர்கள் பின்னால் வருவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 


தொடர்ந்து சிறுவர்களை, பெரியவர்களை நாய்கள் தாக்கி வருவதால் அதிலிருந்து பள்ளி செல்லும் சிறுவர்களை பாதுகாக்கவே இவ்வாறு துப்பாக்கி ஏந்தியுள்ளதாகவும், அதுபோன்ற அச்சுறுத்தல் ஏதாவது நாய்களால் ஏற்பட்டால் நாய்களை சுட்டு தள்ளவும் தயங்கமாட்டேன் என்றும் துப்பாக்கி ஏந்திய நபர் வைரல் வீடியோவில் பேசியுள்ளார்.