மேலும் அறிய

டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

விழுப்புரம் நகரில் நள்ளிரவு நேரத்தில் டீக்கடையில் ஏற்பட்ட சாதாரண வாய்த்தகராறு, ஒரு கொலை முயற்சி சம்பவமாக மாறியுள்ளது.

விழுப்புரம் : விழுப்புரம் நகரில் நள்ளிரவு நேரத்தில் டீக்கடையில் ஏற்பட்ட சாதாரண வாய்த்தகராறு, ஒரு கொலை முயற்சி சம்பவமாக மாறியுள்ளது. பிரபல ரவுடி ஒருவரின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ரவுடி தலையில் கல்லை போட்டு கொலை முயற்சி

விழுப்புரம் நகரில் நள்ளிரவு நேரத்தில் டீக்கடையில் ஏற்பட்ட சாதாரண வாய்த்தகராறு, ஒரு கொலை முயற்சி சம்பவமாக மாறியுள்ளது. பிரபல ரவுடி ஒருவரின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கதிரவன் (40). 'மெண்டல் கதிர்' என்று அழைக்கப்படும் இவர் அப்பகுதியின் பிரபல ரவுடி ஆவார். நேற்று முன்தினம் நள்ளிரவு கதிரவன் மேல்தெரு பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த விராட்டிகுப்பம்பாதையைச் சேர்ந்த மேகநாதன் (44) மற்றும் அன்பு (40) ஆகியோருக்கும், கதிரவனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. கதிரவன், அன்புவிடம் தேவையின்றி வம்புக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்ட மேகநாதனுக்கும் கதிரவனுக்கும் இடையே மோதல் முற்றியது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மேகநாதன் கதிரவனை கீழே தள்ளிவிட்டார். இருதரப்பினரும் அங்கிருந்த டீ குடிக்கும் கண்ணாடி கிளாஸ்களை எடுத்து ஒருவரை ஒருவர் தலையில் தாக்கி குத்திக் கொண்டனர். மோதலின் உச்சகட்டமாக, கதிரவன் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது, மேகநாதன் அங்கிருந்த கனமான கிரைண்டர் குழவி கல்லை எடுத்து கதிரவனின் தலையில் போட்டு அவரைத் தீர்த்துக்கட்ட முயன்றுள்ளார்.

இந்தத் தாக்குதலில் தலை சிதைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த கதிரவனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தப்பியோடிய மேகநாதன் மற்றும் அன்பு ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
டிவியில் பிடித்த பாடலை போடாத கணவர்.. ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு: அதிர்ச்சியில் ஆத்தூர் - நடந்து என்ன?
டிவியில் பிடித்த பாடலை போடாத கணவர்.. ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு: அதிர்ச்சியில் ஆத்தூர் - நடந்து என்ன?
கணவனை கொன்று 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் மர்ம கும்பல் அட்டூழியம்!
கணவனை கொன்று 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் மர்ம கும்பல் அட்டூழியம்!
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், என்ன செய்யனும்? மத்திய அரசு அறிவிப்பு
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், என்ன செய்யனும்? மத்திய அரசு அறிவிப்பு
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Embed widget