ஆத்தாடி.. நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண் சடலம்.. ஆவியுடன் பேச முயன்ற காதலன்!
சம்பவம் நடைபெற்ற நாளில் இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க அந்த வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது திருமணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொலை நிகழ்ந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அவரது காதலனால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிர்வாணமாக கிடந்த இளம்பெண்
கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகாபுரி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு 24 வயது பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் படுக்கயறையில் நிர்வாணமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த பெண்ணின் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டதற்கான காயங்களும் இருந்தது. மேலும் அவர் இறந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில் திருப்பம்
இதனிடையே கொலை செய்யப்பட்ட பெண் யார் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே பிப்ரவரி 11 ஆம் தேதி தனது பெண்ணை காணவில்லை என ஒருவர் போலீசில் புகாரளித்தார். ஜனவரி 12ம் தேதி அவரை இந்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இறக்கி விட்டதாகவும், அதன்பின் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாக கொண்டு இறந்த பெண்ணின் அடையாளங்களுடன் போலீசார் ஒப்பிட்டு அது அந்த காணாமல் போன பெண் தான் கண்டுபிடித்தனர்.
இதற்கிடையில் அந்த பெண் உடல் மீட்கப்பட்ட வீட்டை பியூஷ் தம்னோடியா என்பவர் வாடகைக்கு பெற்றது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில் இந்த நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலன் என தெரிய வந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் பியூஷ் தம்னோடியா கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதன்படி கொலை செய்யப்பட்ட பெண்ணும் பியூஷ் தம்னோடியாவும் நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளனர். சமீபகாலமாக அவர்களுக்குள் திருமணம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் காதலர்கள் சண்டையிட்டு வந்துள்ளனர்.
கழுத்தை நெறித்து கொலை
இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற நாளில் இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க அந்த வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது திருமணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன் இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். தொடர்ந்து சண்டை வரவே ஆத்திரத்தில் பியூஷ் தம்னோடியா அப்பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். மேலும் அவரது உடலை ஒரு கயிறால் கட்டியுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் அந்த வீட்டில் இருந்து விட்டு இந்தூரிலிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். நேராக மகாராஷ்டிராவின் பன்வேலுக்குச் சென்ற பியூஷ் தம்னோடியா அங்கு ஒரு ஹோட்டலில் இரவு தங்கி மாந்தீரிக சடங்குகளை செய்து அந்தப் பெண்ணின் ஆவியைத் திரும்ப அழைக்க முயற்சித்துள்ளார். அதன்பின் மும்பைக்குச் சென்ற பியூஷ் உள்ளூர் ரயில்களில் பயணம் செய்து பொழுதைப் போக்கியுள்ளார்.
அவர் கொலை செய்து விட்டு தப்பித்தபோது அந்த பெண்ணின் மொபைல் போனையும் உடன் எடுத்து சென்ற நிலையில் அதனை மகாராஷ்ட்ராவில் வைத்து அழித்துள்ளார். அந்த பெண் மற்ற ஆண்களிடம் பேசியதாக எழுந்த சந்தேகமும் கொலைக்கான காரணமாக அமைந்திருக்கிறது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேல்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.























