மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட கலைஞர் சிலை திறப்பு விழாவில் டோக்கன் முறையில் பணம் பட்டுவாடா செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


மயிலாடுதுறை கலைஞருக்கு சிலை திறப்பு 


திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் உருவ சிலை மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக மணல்மேடு கிராமத்தில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நிறுவப்பட்டுள்ளது. மணல்மேடு கடைவீதியில் உள்ள கலைஞர் படிப்பகம் வளாகத்தில் சுமார் எட்டடி உயரம் கொண்ட கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. அதனை தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், கலைஞர் கருணாநிதியின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 





அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு 


முன்னதாக அவர் திமுக கொடிக்கம்பத்தை திறந்து வைத்து கொடி ஏற்றினார். அவருக்கு மாவட்ட திமுக சார்பில் புத்தர் சிலை மற்றும் செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான  நிவேதா.முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். 


Aadhav Arjuna : “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!




உதயநிதி ஸ்டாலின் பேச்சு 


நிகழ்ச்சியை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்; மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞரின் முதல் உருவ சிலையை திறந்து வைப்பது மகிழ்ச்சி அடைகிறேன். சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே பெற்ற கலைஞர், இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகித்தவர். கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பாசிச பாஜக கூட்டணிக்கு கடிவாளம் போட்டுள்ளது என்றார். மேலும் முன்னதாக பேசிய திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் உதயநிதி ஸ்டாலினை மூன்று நபர்களுக்கு பிடிக்காது என தெரிவித்திருந்தார், அதற்கு உதயநிதி ஸ்டாலின் அந்த மூன்று நபர்கள் யார் என தெரிவித்தால் அவர்களுக்கும் பிடித்தால் போல தானை திருத்திக்கொண்டு நடந்துக்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்தார்.


New Maruti Dzire 2024: தயாரானது புதிய மாருதி டிசையர் 2024 - அறிமுகம் எப்போது, காரின் புதிய அம்சங்கள் என்ன?




கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பணப்பட்டுவாடா


இந்நிலையில் இந்த சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக மணல்மேடு மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் திமுகவினர் வாகனங்களில் அழைத்துவரப்பட்டிருந்தனர். பின்னர் கூட்டம் முடிந்ததும் முன் கூட்டியே பேசியபடி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, டோக்கனை வாங்கிய தொண்டர்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர். இறுதியாக டோக்கனை கொடுத்து விட்டு 200 ரூபாயை பெற்ற பின்னரே தாங்கள் வந்த வாகனத்தில் பொதுமக்கள் ஏறி  சென்றனர். இந்நிலையில் தற்போது டோக்கன் கொடுத்து பணம் பெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைராலக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பொதுமக்கள் ஆளுங்கட்சி கூட்டத்திற்கே 200 ரூபாய் கொடுத்து கூட்டம் கூட்ட வேண்டிய நிலை இருக்கிறதா என    பேசி வருகின்றனர்.