மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொடக்கார மூலை கிராமத்தை சேர்ந்தவர் 39 வயதான ஆனந்த். இவர் மயிலாடுதுறை ஆயுத படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதனிடையே ஆனந்துக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்திற்கும் அவர் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவதாகவும், இதனால்   கோவித்துக் கொண்டு குழந்தைகள் உடன் கொள்ளிடம் பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.




அதனைத் தொடர்ந்து ஆனந்த் மீண்டும் வீட்டிற்கு வருமாறு தனது மனைவிக்கு அழைத்ததாகவும், ஆனால் ஆனந்த் மனைவி வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த ஆயுதப்படை காவலர் ஆனந்த் அப்பகுதியில் உள்ள மதுபான கடையில் மதுவாங்கி அதில் விஷம்  கலந்து அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து சிறிது நேரத்தில் ஆனந்த் மயங்கி விழ இதனைக் கண்ட அவரது உறவினர்கள் பதறிப்போய் ஆனந்தை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்து அங்கு  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து கொள்ளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


PM Modi Reply: நோ பாலாக போடும் எதிர்க்கட்சிகள், சதமாக பறக்கவிடும் ஆளுங்கட்சி: பிரதமர் மோடி




மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)