கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


26 மீனவ கிராமம் 


மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 மீனவர் கிராமங்கள் உள்ளன. தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் மாவட்ட மீனவர்கள் விசைபடகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பைபர் படகு மீனவர்கள் மட்டுமே ஆழ்கடலுக்கு செல்லாமல் கரையோரங்களில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு கின்றனர்.


ATVM Machine: ரயில் டிக்கெட் எடுக்க ATVM: வரிசையில் நிற்க தேவையில்லை; எப்படி டிக்கெட் பெறுவது தெரியுமா?




மீனவர்களுக்கு இடையே மோதல் 


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர் கிராமம் ரவீந்திரநாத் தாகூர் தெருவை சேர்ந்த பன்னீர் என்பவரின் 42 வயதான மகன் சண்முகவேல் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சண்முகவேல் அவரது தம்பி சதீஷ்குமார் உள்ளிட்ட 9 மீனவர்கள் நேற்று காலை 8 மணிக்கு தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். காலை 10:30 மணிக்கு புதுப்பேட்டை மீனவ கிராமத்திற்கு கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்க கடலில் வலையை இறக்கியுள்ளனர். அப்போது அங்கு 3 பைபர் படகுகளில் வந்த பூம்புகார் மீனவர்கள், நாங்கள் பார்த்த மீனை நீங்கள் எப்படி பிடிக்கலாம் எனக் கூறி தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும் தரங்கம்பாடி மீனவர்களை தாக்கி, அவர்களின் படகால் தரங்கம்பாடி மீனவரின் படகின் மீது மோதி படகையும், வலைகளை சேதப்படுத்தியதாக கூறுகின்றனர்.


Kalki 2898AD: அந்த ஹாலிவுட் படத்தோடு ஒப்பிடாதீங்க... கமல் - பிரபாஸ் இணையும் கல்கி பட இயக்குநர் காட்டம்!




காயமடைந்த மீனவர்கள் 


இதில் தரங்கம்பாடியை சேர்ந்த பன்னீர் மகன் 31 வயதான சதீஷ்குமார், செல்லதுரை என்பவரின் 24 வயதான மகன் நித்திஷ் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மீனவர்களை வெள்ளக்கோவில் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தரங்கம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ந்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். 


Cinema Headlines: குட் பேட் அக்லி அப்டேட்: பிரதமர் மோடியைக் கலாய்த்த தியாகராஜா குமாரராஜா: சினிமா ரவுண்ட்-அப்!




செய்தியாளர்களை சந்தித்த மீனவர்கள் 


இதுகுறித்து செய்தியாளர்களிடம்  தரங்கம்பாடி மீனவர்கள் கூறுகையில், “சுருக்குமடி வலையால் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதனை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் தாக்குதல் நடத்திய மீனவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும்.  இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருதரப்பு மோதலில் காயம் அடைந்த பூம்புகார் மீனவர்களும் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இரு கிராம மீனவர்களிடையேயான தகராறு குறித்து தரங்கம்பாடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மோதல் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த மீனவர்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா எம். முருகன் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோன்று மயிலாடுதுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவரை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.