டெல்டா மாவட்டங்களில் தொடர் டிராக்டர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதிகரிக்கும் டிராக்டர் திருட்டு
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில் விவசாயத்திற்கு முக்கிய உபகரணமான டிராக்டர் இந்த மாவட்டங்களில் அவ்வப்போது திருடுப்போய் வந்தன. இதனால் மழை வெள்ளப் பாதி, தண்ணீர் பற்றாக்குறை, மேட்டூர் நீர்வரத்து குறைவு என பல்வேறு இன்னலுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு இந்த டிராக்டர் திருட்டும் சேர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி மாற்றியது.
மயிலாடுதுறையில் காணாமல் போன டிராக்டர்
மேலும் இது தொடர்பாக மயிலாடுதுறை, நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்குகள் பதிவாகி வந்த நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் சேர்ந்தவர் முருகன். விவசாயான இவர் மயிலாடுதுறை ராஜேஸ்வரி நகரில் கட்டிடங்கள் கட்டுவதற்கான ஜல்லி, மணல், எம்.சண்ட் உள்ளிட்ட பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார்.
UGC NET 2024: ஆசிரியர் தேர்வர்களே மறந்துடாதீங்க… யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!
காவல்நிலையத்தில் புகார்
விவசாய பணிகள் போக மீதம் உள்ள நேரங்களில் தனது டிராக்டரை கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த மாதம் நவம்பர் 28 -ம் தேதி இரவு தனது டிராக்டரை மயிலாடுதுறை ராஜேஸ்வரி நகரில் உள்ள தனது அலுவலகத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவருடைய டிராக்டர் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அக்கம் பக்கத்தில் விசாத்த முருகன் தனது டிராக்டர் திருடுபோனதை உணர்ந்து, உடனடியாக மயிலாடுதுறை காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
குற்றவாளி கைது
முருகனின் புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவகுமார், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் டிராக்டர் காணாமல் போன இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டையை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் 39 வயதான வினோத் மற்றும் அவரது நண்பன் இருவரும் கூட்டாக இணைந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
அதனைத் தொடர்ந்து திருச்சி அருகே பதுங்கி இருந்த வினோத்தை மடக்கி பிடித்து, திருபோன டிராக்டர் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்தி இருசக்கர வானகத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் திருட்டு ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இவர் மீது கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டிராக்டர் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.