தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக பிரச்சாரங்களும் எதிர்ப்புகளும் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், கள்ள சாராயம் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசே டாஸ்மாக் என்ற பெயரில் மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. மதுவிற்கு பலரும் அடிமையாகி பல இன்னல்களை சந்தித்து வந்தாலும், அந்த மதுப்பழக்கத்திலிருந்து மீள்வது என்பது மது பிரியர்களுக்கு முடியாத காரியமாக இருந்து வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி என பாகுபாடு இன்றி இளம் வயதினரும் அதிக அளவில் தற்போது மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி மது அருந்தி பல இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்று பல பிரச்சனைகள் இருந்தாலும் பூரண மதுவிலக்கு என்பது ஒரு சாத்தியமில்லாத விஷயமாகவே தமிழகத்தில் தொடர்கிறது.




மேலும் மது பிரியர்கள் மது அருந்துவதும், மது போதையில் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் குழந்தைகளுக்கும் மதுவினை குடிக்க கொடுக்கும் நிகழ்வுகளும் பல்வேறு இடங்களில் நடந்தேறி வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்தேறி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு கிராமத்தில் 9 வயது சிறுவனுக்கு இளைஞர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இளைஞர் ஒருவரால் கொடுக்கப்பட்ட மதுவினை அருந்திய சிறுவன் மயக்க நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை சிறுவனை தூக்கிக்கொண்டு மயிலாடுதுறை காவல் நிலையம் வந்து புகார்  அளித்துள்ளார்.


TNPSC Coaching Class: டி.என்.பி.எஸ்.சி. சிவில் நீதிபதி பணிக்கான தேர்வு - இலவச பயிற்சி வகுப்புகள்; முழு விவரம்!


மேலும் அந்த புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அறிவழகன் என்பவர் தன் மகன் மற்றும் மற்றொரு சிறுவனுக்கு மதுவை ஊற்றி குடிக்க வைத்து உள்ளதாகவும், இதனால் மது போதையில் சிறுவன் மயக்க நிலைக்கு சென்றுள்ளதாகவும், சிறுவனை தூக்கிக்கொண்டு நேரடியாக காவல் நிலையத்துக்கு வந்து பெற்றோர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை காவல்துறையினர் உடனடியாக சிறுவனை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துனர். சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்து தலைமறைவாக இருந்த இளைஞரை தேடி வந்த நிலையில், அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Por Thozhil Box Office:: 10 கோடிகளைக் கடந்த வசூல்... பாராட்டுக்களுடன் வசூலையும் அள்ளும் ‘போர் தொழில்’!




மது குடித்ததால் மயக்கம் ஏற்பட்ட சிறுவனுக்கு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் உடல்நலன் தேறி உள்ளார். சிறுவர்களை பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பில் வைக்க தவறினால் இது போன்ற விபரீத சம்பவங்கள் அரங்கேறும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்றாக மாறி உள்ளது. மேலும் இது போன்ற மனநிலை உள்ள இளைஞர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


TNPSC Coaching Class: டி.என்.பி.எஸ்.சி. சிவில் நீதிபதி பணிக்கான தேர்வு - இலவச பயிற்சி வகுப்புகள்; முழு விவரம்!