UP Gun Shot: உத்தரபிரதேசத்தில் அதிகாலையில் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

துப்பாக்கியால் சுட்டுக் கொலை:

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் வீட்டு வாசலில் நின்று இருந்த ஒருவரை 4 பேர் கொன்ற கும்பல், சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேஹ்ரி' (ரம்ஜான் நோன்ப்ன்போது இஸ்லாமியர்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) உணவுக்கு தயாரகி கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் மற்ற கோணங்களிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வைரலாகும் வீடியோ:

அலிகரின் ரோராவரில் உள்ள தெலிபாடா பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியில், அதிகாலை 3.15 மணியளவில் தனது வீட்டின் அருகே மற்றொரு நபருடன் ஹாரிஸ் என்ற கட்டா நின்றிருக்கிறார். உடன் இருந்த நபர் அங்கு தரையில் அமர்ந்து இருக்க, இரண்டு பைக்குகள் தனக்கு அருகில் வருவதை ஹாரிஸ் ஆர்வத்துடன் கவனித்து கொண்டிருந்தார். 

தனக்கு அருகில் வந்த இரண்டு பைக்குகளில் ஒன்றின் பின்னால் அமர்ந்து இருந்த நபர் துப்பாக்கியை நீட்டியதைக் கண்டதும், ஹாரிஸ் திரும்பி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறான். ஆனால் பைக் இயக்கத்தில் இருக்கும்போதே ஒரு முறை சுடப்படுகிறான். ஹாரிஸ் அடுத்தடுத்து இரண்டு முறை சுடப்படுகிறார். இதனிடையே, அவருடன் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி தப்பிக்கிறார். படுகாயமைடைந்த ஹாரிஸ் கீழே விழ, மீண்டும் ஒரு முறை சுடப்படுகிறார். தொடர்ந்து தாக்குதல் நடத்திய கும்பல், தாங்கள் வந்த இருசக்கர வாகனங்கள் மூலம் அங்கிருந்து தப்பிக்கின்றனர். இதனிடையே, சத்தம் கேட்டு அங்கே வந்த ஒருவர் அந்த 4 பேரை பிடிக்க பைக்குகளை துரத்தியும் பலனில்லை” உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

காலவ்துறை சொல்வது என்ன?

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஹாரிஸை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோத்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக  தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசும் ஹாரிஸின் உறவினர்கள், “முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெறவில்லை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குற்றவாளிகள்” என தெரிவித்துள்ளனர்.