மூன்றாவதாகவும் ஆண் குழந்தை! கோபத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை - ம.பி.யில் கொடூரம்

மழலைகளின் குரல்கள் யாழையும், குழலையும் மிஞ்சுவன என்ற ஒரு கருத்து உண்டு. உண்மையில் குழந்தைகள் தான் ஒரு வீட்டில் மிகப்பெரிய மகிழ்ச்சி என சொல்வார்கள்.

Continues below advertisement

மத்தியப் பிரதேசத்தில் மூன்றாவதாகவும் ஆண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் தந்தை செய்த செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

மத்திய பிரதேசத்தில் கொடூரம்:

மழலைகளின் குரல்கள் யாழையும், குழலையும் மிஞ்சுவன என்ற ஒரு கருத்து உண்டு. உண்மையில் குழந்தைகள் தான் ஒரு வீட்டில் மிகப்பெரிய மகிழ்ச்சி என சொல்வார்கள். அத்தகைய குழந்தைகளுக்காக ஏங்குபவர்களை கேட்டால் அதன் அருமை புரியும். அதேசமயம் தவறான வழியில் பெற்றெடுத்த அல்லது எதிர்பார்த்த பாலின குழந்தை கிடைக்காத கோபத்தில் அந்த பிஞ்சுகளை கொலை செய்வதும் சமூகத்தில் தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், கடுமையான தண்டனைகள் கொடுத்தாலும் தவறுகள் குறைந்த பாடில்லை. அப்படி ஒரு சம்பவம் தாம் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. 

அங்குள்ள பதர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஜர்வாடா என்ற ஊரில் அனில் உய்கே என்பவர் வசித்து வருகிறார். அவர் தனது மனைவி ருச்சிகா மற்றும் 7 மற்றும் 5 வயதில் இரண்டு ஆண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இதனிடையே இரண்டாவது மகன் பிறந்த பிறகு அனில் உய்கே தனது மனைவியை குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய சொல்லி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் ருச்சிகா குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளவில்லை.

ஆண் குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை: 

இப்படியான நிலையில் மனைவி மீண்டும் கர்ப்பமாக, இந்த முறை தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என அனில் உய்கே எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் மூன்றாவதாகவும் ஆண் குழந்தை பிறக்க, கணவன்,மனைவிக்குள் சண்டை வெடித்துள்ளது. தொடர்ந்து பிரச்சினைகள் நிகழ்ந்து வர, கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மாலை மதுபோதையில் அனில் உய்கே வீட்டுக்கு வந்துள்ளார். வந்ததும் ருச்சிகாவுடன் வழக்கம்போல சண்டையிட்டுள்ளார். இது கைக்கலப்பாக மாற, ருச்சிகா அடி தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அனில் உய்கே வீட்டில் இருந்த தனது 12 நாட்களே ஆன கைக்குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றார். அதன்பின் அங்கிருந்து தப்பிச் சென்ற அவர் மீது ருச்சிகா காவல்துறையில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து பிரிவு 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அனில் உய்கேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Crime: பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை! சாகும் வரை சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்!

Continues below advertisement
Sponsored Links by Taboola