சிறுவன் உயிரிழப்பில் சந்தேகம் - கொலை சம்பவம் தான் என உறவினர்கள் குற்றச்சாட்டு - சிறுவனின் உடல்வாங்க மறுப்பு.
சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் வரை உடலை பெறமாட்டோம்
சிறுவனை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளதாகவும், காவல்துறையினர் அதனை மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டு - குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் வரை உடலை பெறமாட்டோம் என சிறுவன் முத்துவேலனின் உறவினர்கள் பேட்டி.
சிறுவன் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன் - சத்தியா இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 7 வயதில் முத்துச்செல்வம் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பெரியகருப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தனியாமங்கலத்தில் உள்ள சொந்த வீட்டில் தாய் சந்தியா மற்றும் மகள், மற்றும் மகன் முத்துச்செல்வம் ஆகியோருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில், சிறுவன் முத்துச்செல்வம் தனியாமங்கலம் அருகே வெள்ளலூரில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் வீட்டின் அருகே 11.00 மணியளவில் விளையாட செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், மாலை வரை சிறுவன் வீடு திரும்பாததால், சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் காவல்துறை உதவியுடன் அப்பகுதி முழுவதும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்
இந்நிலையில், இன்று 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட இருந்த நிலையில், இன்று அதேபகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், இதுகுறித்து, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாயமான சிறுவன் இன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது, கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் எங்களை தேட சொன்னதாகவும் உறவினர்கள் பேட்டி.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறுவன் முத்துவேலனின் உடல் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் உடலை வாங்க மறுத்து கீழையூர் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபடபோவதாக உறவினர்கள் பேட்டி. காவல்துறையினர் புகாரளித்த உடனே இன்றுபோல் தீவிரமாக தேடியிருந்தால் சிறுவனை மீட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும் எனவும், காவல்துறையினர் எங்களை தேட சொன்னதாகவும் உறவினர்கள் பேட்டி.
