மதுரை பாலமேடு அருகே செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றபோது மின்சாரம் தாக்கி 11ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு


மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கருப்பனகுமார் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். ஊரடங்கு காலம் என்பதால் ஆன்லைன் வகுப்பிற்காக கருப்பணக்குமாருக்கு அவரது பெற்றோர் மொபைல் போன் வாங்கித் தந்துள்ளனர். படித்த நேரம் போக, மற்றநேரங்களில் கேம் விளையாடவும், நண்பர்களுடன் ஷாட் செய்யவம் கருப்பணகுமார் மொபைல் போனை பயன்படுத்தி வந்துள்ளார். 


நேற்று மாலை நீண்ட நேரம் நண்பர்களுடன் ஷாட் செய்த கருப்பணக்குமார், பின்னர் வீடியோ கேம் விளையாடியுள்ளார். அதனால் மொபைல் போன் சார்ஜர் இல்லாமல் போயுள்ளது. ஆர்வத்தில் அதை அவர் கவனிக்காத நிலையில், சிறிது நேரம் கழித்து சார்ஜ் இல்லாததை கவனித்துள்ளார். உடனே தன் வீட்டில் சார்ஜரில் போட்டபடி வீடியோ கேம் விளையாடியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து, கருப்பணக்குமார் தூக்கிவீசப்பட்டுள்ளார்.




மயங்கி கிடந்த கருப்பனகுமாரை மீட்ட உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது செல்லும் வழியிலேயே பரிதாபமாக மாணவர் கருப்பனகுமார் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி மாணவர் இறப்பு குறித்து பாலமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மாணவர்களுக்கு செல்போன் பயன்பாட்டை பெற்றோர் ஒழுங்குபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இது ஆன்லைன் கல்வி காலம் என்பதால் மொபைல் போன் மாணவர்களுக்கு தவிர்க்க முடியாதது தான். ஆனால் அதே நேரத்தில் கல்வியை தவிர்த்து பிற பயன்பாட்டிற்கு அது வரும் போது தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கிறது. சார்ஜ் செய்வது உள்ளிட்ட அன்றாட பணிகளை பெற்றோரே முடித்து விட்டு, பயன்பாட்டிற்கு மட்டும் மாணவர்களிடம் மொபைல் போனை தர பெற்றோர் முன்வர வேண்டும். அவர்களின் கல்வி பணி முடிந்ததும் மொபைல் போனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.