மதுரை மாவட்ட காவல்துறையின் Storming Operation) - ஒரே நாளில் 22 குற்றவாளிகள் கைது !
அதிரடி தீவிர சிறப்பு வேட்டை (Storming Operation) நடத்தப்பட்டது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் உத்தரவின் பேரில் நேற்று மாவட்டம் முழுவதும் அதிரடி தீவிர சிறப்பு வேட்டை (Storming Operation) நடத்தப்பட்டது. இந்த சோதனையில், மதுரை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தணிக்கை செய்து, அதில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மற்றும் கொடூர ஆயுதங்கள் வைத்திருந்த சுமார் 22 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
கடுமையான அதிரடி நடவடிக்கைகள் தொடரும்
பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இத்தகைய கடுமையான அதிரடி நடவடிக்கைகள் தொடரும்" என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
