மதுரையில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து இளைஞர்கள் படுகொலை - அச்சத்தில் பொதுமக்கள்

மதுரையில் அடுத்தடுத்து கொலை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

24 மணி நேரத்தில் மதுரையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் உருவாகியுள்ளது.

போதைக்கு அடிமையான மாணவன்

 
மதுரை மாவட்டம் சிலைமான் பிள்ளையார் கோயிலை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகனான அழகர்சாமி  9ஆம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது மது போதைக்கு அடிமையான இளைஞர் அழகர்சாமி நேற்று இரவும் போதையில் வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். இந்நிலையில் திடீரென நள்ளிரவு 2 மணியளவில் அழகர்சாமியின் வீட்டின் கதவை தட்டி அழகர்சாமியை வெளியே வரும்படி அழைத்த கும்பலானது சரமாரியாக ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறிது நேரத்திலயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 

இளைஞர் வெட்டி படுகொலை

 
இத்தகவல் அறிந்து விரைந்து வந்த சிலைமான் காவல்துறையினர் அழகர்சாமியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் தகராறு ஏற்பட்டு அதனால் இளைஞர் வெட்டி படுகொலை செய்திருப்பதாக காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டு வாசலில் வைத்து இளைஞரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

24 மணி நேரத்தில் மதுரையில் அடுத்தடுத்து கொலை

 
நேற்று மாலை மதுரை மாவட்டம் சிக்கந்தர்சாவடி பகுதியைச் சேர்ந்த கமலேஷ் என்ற இளைஞர் நேற்று சாலையில் வைத்து பொதுமக்கள் நடமாடும் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிலைமான் பகுதியில் இளைஞர் வீட்டு வாசலில் படுகொலை என 24 மணி நேரத்தில் மதுரையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் உருவாகியுள்ளது.
 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola