குக் கிராமத்தில் ரிசார்ட்டில் இதுபோன்று இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தென்னந்தோப்பில் விபச்சாரம்


மதுரை மாவட்டம் மஞ்சம்பட்டி கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்புடன் கூடிய ரிசார்ட் ஒன்று உள்ளது. இங்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய தனி அறைகள், நீச்சல் குளம், விளையாட்டு மையங்கள் உள்ளிட்ட அமைப்புகளோடு இயங்கி வந்ததை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகிய இருவரும் வாட்ஸ் அப் மூலம் இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் அவர்களது உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் வாசகங்கள் மற்றும் கவர்ச்சிப் புகைப்படங்களையும் பகிர்ந்து. மன நிம்மதியாக மதுரைக்கு அருகே இருக்கக்கூடிய பகுதியில் நீங்கள் ஒன்று கூடலாம், உல்லாசமாக இருக்கலாம் என்பன போன்ற வரிகளை பரவச் செய்து அதன் மூலம் வாடிக்கையாளர்களை அனைவரையும் விடுமுறைநாட்களில் ஒரே இடத்தில் வரவழைத்து இருக்கிறார்கள்.

 


 

போலீஸ் விசாரணை


குறிப்பிட்ட இடத்தில் இதுபோன்று பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் அவர்களின் உத்தரவின் பேரில் சிறப்புப்படையானது. நேரில் சென்று பாலியல் தொழில் ஈடுபடுத்தும் விடுபட்ட பெண்கள் மற்றும் அதற்கு காரணமாக அமைந்த நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றது.

 

விபச்சாரத்திற்கு வித விதமான ஆப்ஸன்

 

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினர் சமூக வலைதளங்களில் மட்டுமே தங்களது இந்த தொழில் குறித்த விபரங்களை  பரவச் செய்து இளைஞர்களை தங்கள் வசம் வரவு செய்து கொள்ளை லாபம் பார்த்திருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் அனுப்பிய அந்தக் குறுஞ்செய்தியில் “மதுரையில் உங்களுக்கு பிடித்த மூன்று நபர்கள் கூட நீங்கள் உல்லாசமாக இருக்கலாம்.  நீங்கள் உல்லாசமாக இருக்கும்போது உங்களுக்கு உணவு மது உள்ளிட்டவைகளும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அனுமதி கட்டணம் ரூபாய் 13,000, நீங்கள் உறுதி செய்ய முன் படமாக ரூபாய் 2000 கட்டணம் செலுத்த வேண்டும். உறுதி செய்த பிறகு நீங்கள் கொண்டாட்டத்திற்கு வரும் முன்னரே மீது தொகையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு 100% உல்லாசத்திற்கு நாங்கள் உத்திரவாதம்” என்கின்ற வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான குறுந்தகவல்களை அனுப்பி இளைஞர்களுக்கு வலை விரித்து இருக்கிறது இந்த கோவையைச் சேர்ந்த தம்பதி.

 

11 பெண்கள் மீட்பு


காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சம்பவ இடத்திலிருந்து விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு செல்போன் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஆணுறை உள்ளிட்டவைகளை கைப்பற்றி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி நாகர்கோவில், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 25 வயது முதல் 45 வயது வரை உள்ள 11 பெண்கள் மீட்கப்பட்டு மதுரையில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரையின் புறநகர் பகுதியாக உள்ள குக் கிராமத்தில் ரிசார்ட்டில் இதுபோன்று இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.