மேலூர் அருகே பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.
 
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் இளம் பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் மேலூர் தொகுதி, அதிக கிராமங்கள் கொண்டுள்ளது. கிரானைட் குவாரி செயல்பாட்டால் இப்பகுதியில் பாறைகள், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு பின் தங்கிய பகுதியாக இருந்து வருகிறது. இந்த சூழலில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியலில் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.
 
மூவரையும் கைது செய்து மகளிர்  போலீசார் விசாரணை
 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஒரு கிராமத்தில் 19 வயது இளம்பெண், தீபன்ராஜ் (25) என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு பேசிக் கொண்டிருந்ததாகவும். அப்போது அங்கு வந்த திருமாறன், மதன் ஆகியோர் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் தீபன்ராஜ் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து மகளிர்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் தீபன்ராஜை இளம் பெண் சந்திக்க வந்த நிலையில், தீபன் ராஜ், திருமாறன், மதன் ஆகிய மூவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
என்ன நடந்தது
 
இது குறித்து விசாரிக்கையில் தீபன்ராஜ் அவரது காதலியுடன் தனியாக இருக்கும் போது கூலி வேலை செய்யும் மதன் மற்றும் திருமாறன் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அப்போது மூன்று பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, அங்கிருந்து இளம்பெண் தப்பியோடியுள்ளார். இந்த விவகாரம் மேலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.