சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் வயது (48). இவர் கடந்த 27-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு காரில் வந்தபோது மாயமானார். இது தொடர்பாக அவரது மனைவி பூர்ணிமா கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். பின்னர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை ஒரு கும்பல் கடத்தி சென்று கொலை செய்து உடலை சாமல்பட்டி அருகே மாந்தோப்பில் புதைத்துள்ளது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக அவருடன் காரில் பயணித்த சென்னையை சேர்ந்த வக்கீல் கிருஷ்ணகுமார், பெரம்பலூர் சபரீஷ், சாமல்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஜிம் மோகன் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து ஜனார்த்தன பிரதானின் சடலம். சாமல்பட்டி மாந்தோப்பில் மீட்கப் பட்டதால் சாமல்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் . தற்போது, இந்த வழக்கு கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த 9 நபர்களிடம் விசாரணை தொடங்கினர், இந்நிலையில், கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சபரீஷ் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறியது: பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தில் வசித்து வந்த சபரீஷ், கடந்த ஒரு வருடத்திற்கு முன் சென்னைக்கு சென்று வாடகை வீட்டில் குடியேறியுள்ளார்.
அங்கு விளம்பர படங்கள் எடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாகவும். அப்போது அங்குவந்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமாருடன் சபரீசுக்கு நண்பர்களாக பழக்கம் ஏற்பட்டு மேலும் கொலை செய்யப்பட்ட ஜனரஞ்சன் பிரதான் ரூ.30 கோடி லோன் வாங்கி தருவதாக சபரீசிடம் கூறியதாகவும், அதற்காக ரூ.3.50 கோடி கமிஷன் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தொகையை சபரீஷ், ஜனரஞ்சன் பிரதானிடம் கொடுத்த நிலையில், அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் அவரை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து சம்பவ நாள் இரவு ஆடிட்டருடன் கூட்டாக மது அருந்தி உள்ளனர் அதன் பிறகு பணத்தை கேட்டு தாக்கி மிரட்டினார்கள். இதில் ஜனரஞ்சன் பிரதான் இறந்ததால் அவரது உடலை சாமல்பட்டியில் மாந்தோப்பில் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முனியப்பன் வயது ( 39), விஜி வயது (29) ஆகிய 2 பேரையும் கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் தேடி வந்தனர் . இந்த நிலையில் அவர்கள் 2 நபர்களும் கிருஷ்ணகிரி ஜே.எம்.1 நீதி மன்றத்தில் மாஜிஸ்திரேட்டு செந்தில்பிரபு முன்னிலையில் சரண் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி முனியப்பன், விஜி ஆகிய 2 நபர்களையும் காவல்துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் 9 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 2 நபர்கள் தற்போது சரண் அடைந்துள்ளனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த ஆடிட்டர் கொலை கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.