கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 18 வயது சிறுமி தான் வசிக்கும் வாடகை வீட்டில் தனியாக இருந்தபோது, பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த கடந்த ஜனவரி 19 ம் தேதி (புதன்கிழமை) அந்த சிறுமி யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் உள்ளே தூக்கில் தொங்குவதைக் கண்டதும், சிறுமியின் குடும்பத்தினர் வீட்டின் கதவை உடைத்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிறுமியை உறவினர்கள் உட்பட 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த சிறுமி POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) கீழ் பல வழக்குகளில் பாதுகாக்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குழந்தைகள் நலக் குழுவும் (CWC) கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெண்கள் உரிமை ஆர்வலர் உஷா புனாதி கூறியுள்ளார். தொடர்ந்து அவர் இதுகுறித்து பேசுகையில், போக்சோ மூலம் பாதுகாக்கப்பட்ட சிறுமிகள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பொறுப்பு குழந்தைகள் நலக் குழுவுக்கு உள்ளது. இது இந்த வழக்கில் செய்யப்படவில்லை. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியும் சிறுமியின் வீட்டிற்கு தவறாமல் சென்று அங்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதையும் செய்ய தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறுமியின் தற்கொலை முயற்சிகள் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்த பிறகும், சிறுமிக்கு எந்த உதவியும் ஆலோசனையும் வழங்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்