கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் செருமூடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (53). இவரது மனைவி லேகா மேரி. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை பிரிந்து தனது சகோதரி வீட்டில் வந்துள்ளார். பின்னர் இருதரப்பு உறவினர்களும் சமாதானம் செய்து வைத்ததை அடுத்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். 

Continues below advertisement

சந்தேகம் மரணம்

இந்நிலையில் திடீரென வீட்டில் இருந்த கணவர் ராஜூ திடீரென மயங்கி கிடப்பதாக மனைவி லேகா மேரி அலறி கூச்சலிட்ட படியே அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் ராஜூவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இயற்கை மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் உறவினர்கள் ராஜூ மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியதை அடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!

Continues below advertisement

பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டதற்கான தழும்பு இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து ராஜூ மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் லேகா மேரியிடம் போலீசார் பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது சொத்துக்காக கணவரை கொலை செய்திருப்பது தெரிய வந்தது

சொத்துக்காக கணவர் கொலை

அதாவது சொத்து தொடர்பான தகராறில் இந்த கொலை நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசாரிடம் லேகா மேரி அளித்த வாக்குமூலத்தில்: சொத்து தொடர்பாக சம்பவம் நடந்த அன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவர் மீது லேகா மேரி கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். அப்போது நன்றாக தூங்கி கொண்டிருந்த  கணவர் ராஜூவின் கழுத்தை பெல்ட்டால் இறுக்கி கொன்றதாக தெரிவித்தார். இதனையடுத்து மனைவி லேகா மேரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவர் ராஜூவை கொலை செய்வதற்கு முன் அதிகப்படியான மாத்திரைகள் ஏதேனும் கொடுக்கப்பட்டதா? இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து குந்தரா போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.