கரூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் இன்று காலை புறவழிச்சாலையில் வெங்கக்கல்பட்டி என்ற இடத்தில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வண்டியை நிறுத்த முயன்றார். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் கனகராஜ் மீது மோதி விட்டு சென்றது. இதில் பலத்த காயமடைந்த கனகராஜை அந்த சாலை வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் இறந்தார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மீது மோதி உயிர்ப்பலி ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். வெங்கக்கல்பட்டியில் இருந்து சுக்காலியூர் வரையில் உள்ள சாலையின் இருபுறமும் இருந்த கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் தீவிர ஆய்வு செய்தனர். அந்த சோதனையில் பச்சை நிற டெம்போ வாகனம் ஒன்று ஆய்வாளர் மீது மோதி விட்டு சென்றது என கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த வாகனத்தை தேடும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வாகனம் கரூர் மதுரை சாலையில் உள்ள புத்தாம்பூரில் டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் வாகனம் என தெரியவந்தது. இதையடுத்து கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ உள்ளிட்ட 10 பேர் கொண்ட காவல்துறை குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அந்த வாகனம் மற்றும் ஓட்டுநரை கைது செய்ய தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடம், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆட்டையாம்பரப்பு மற்றும் கரூர் ஜவுளி பூங்கா ஆகிய பகுதிகளில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க
நேற்று நள்ளிரவு திருச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட உதவி காவல் ஆய்வாளர் ஆடு திருடிய கும்பலை பிடிக்க சென்றபோது அங்கு குற்றவாளிகள் அவரை கடுமையாக தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார் நிகழ்வு தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் போக்குவரத்து வாகன சோதனை பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் அவர்கள் வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பெரம்பூரில் பால்கனி இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் பாதுகாப்பாக மீட்பு