ஆன்லைன் வர்த்தகத்தில் ஹேக்கர் ஒருவர் புகுந்து ரூ 25 லட்சம் மோசடி.
வெளிநாட்டு நிறுவனத்துடன் ஜவுளி தொழில் வர்த்தகம் சம்பந்தமாக நடைபெற்று வந்த ஆன்லைன் வர்த்தகத்தில் ஹேக்கர் ஒருவர் புகுந்து ரூ.25 லட்சம் அளவில் மோசடி செய்தது குறித்து, கரூர் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கரூர் வடக்கு ராமகிருஷ்ணபுரம் பகுதியில் செயல்பட்டு வரும், ஒரு ஏற்றுமதி ஜவுளி நிறுவனத்தின் பொது மேலாளர் அசித் அலி வயது 34. கரூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது, கடந்த 25 ஆண்டுகளாக வெளிநாட்டிலுள்ள நிறுவனங்களுக்கு கரூரில் உற்பத்தி செய்யப்படும் டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தமான உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெர்மன் நாட்டில் உள்ள நிறுவனத்துடன் வர்த்தகம் செய்து வந்தோம். கடந்த ஜூன் மாதம் ஜெர்மன் கம்பெனிக்கு ரூ.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜவுளி உற்பத்தி பொருட்களை அனுப்பினோம். இமெயிலில் தொடர்பு கொண்டு உற்பத்தி பொருட்களை அனுப்புவதும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களும் தங்களுக்கு சேர வேண்டிய தொகையை அனுப்பியும் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அனுப்பிய ஜவுளி பொருட்களான தொகை ரூ. 25 லட்சம் மூன்று மாதத்தில் தருவதாக கூறப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்து பணம் குறித்து ஜெர்மன் நிறுவனத்திடம் கேட்டபோது ஏற்கனவே அனுப்பி விட்டதாக தெரிவித்தனர். எங்களுக்கும் ஜெர்மன் நிறுவனத்துக்கும் இடையிலான இமெயில் வர்த்தகத்தை ஹேக் செய்த ஹேக்கர் ஒருவர் போலியான ஐடி மூலம் ஜெர்மன் நிறுவனம் அனுப்பிய பணத்தை மோசடி செய்ததாகவும் தெரிகிறது.
எனவே இந்த ஹேக்கர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலியான ஐடி தந்து ரூ.25 லட்சம் மோசடி செய்த ஹேக்கர் யார் என்பது குறித்து கரூர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளித்தலை அருகே இரு பைக்குகள் திருட்டு
குளித்தலையை அடுத்த வைகைநல்லூர் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி முத்து 56 விவசாய கூலி தொழிலாளி. இவர் தனது ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கை கடந்த 18ஆம் தேதி இரவு 7 45 மணியளவில் மாரியம்மன் கோவில் அருகே நிறுத்திவிட்டு ஐயப்பன் பக்தர்கள் பஜனை நிகழ்ச்சிக்கு சென்றார் .பின்னர் திரும்பி வந்த பார்த்தபோது பைக்கை காணவில்லை.
இதுகுறித்து மணிமுத்து கொடுத்த புகாரின் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதே போல் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நல பணியாளர் கணேசன் இவர் பேஷன் ப்ரோ வை கடந்து பத்தாம் தேதி தனது சகோதரரின் கரும்பு தோட்டத்தின் முன் நிறுத்திவிட்டு தோட்டத்துக்கு சென்றால் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்து கணேசன் கொடுத்த புகாரின் படி லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.