கரூர் மாவட்டம், சேங்கலை அடுத்து உள்ளது பாப்புரெட்டிபட்டி கிராமம். இந்த கிராமத்தில் காவேரி மெட்ரிகுலேசன் பள்ளி எனும் பெயரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்.கே.ஜி முதல் 10 ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து முடித்த மாணவியின் பெற்றோர் ஆன்லைன் கல்விக்காக ஆண்ட்ராய்ட் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். 


 




ஆன்லைன் வகுப்பு எடுத்த தமிழ் ஆசிரியர் நிலவொளி என்பவர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். மேலும், வீட்டில் தனியாக இருக்கும் மாணவியிடம் வீடியோ காலில் தவறாக நடந்ததை பதிவு செய்து வைத்துள்ளார். மாணவி 10-ம் வகுப்பு முடித்த நிலையில் அவரின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்டுள்ளனர் பெற்றோர். அதனை தொடர்ந்து மாணவியின் செல்போனை பார்த்த போது ஆசிரியர் வாட்ஸ் அப் எண்ணிலிருந்து வீடியோ கால் பேசியது தெரிய வந்துள்ளது. 


 




இதனை அறிந்து கொண்ட பெற்றோர், உறவினர்கள், நண்பர்களுடன் பள்ளிக்கு வந்து தமிழ் ஆசிரியரின் செல்போனை ஆய்வு செய்தனர். சிறுமியிடம் வாட்ஸ் அப்பில் ஆபாசமாக பேசியது, மெசேஜ்கள் இருந்ததை கண்டு பிடித்ததுடன், தமிழ் ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். 


 




இதனை தொடர்ந்து, மாயனூர் காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் ஆசிரியர் யார், எந்த ஊரை சார்ந்தவர் என்ற முழுமையான தகவல் தெரியவில்லை. கோயம்புத்தூர் சரவணம்பட்டி, அரியலூர் மாவட்டம், பெரம்பலூர், கரூர் மாவட்டம் சணப்பிரட்டி போன்று தனித் தனியாக ஆவணங்களை வைத்துள்ளார். 


 




சாமியார் வேடம் பூண்டுள்ள நிலவொளியின் இரண்டு செல்போன்களில் இது போன்று பல சிறுமிகளின் வீடியோக்கள் இருப்பதை பெற்றோர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், ஆசிரியரின் மொபைல் போனை ஆராய்ந்த போது அந்த போனில் மாணவிகள் மற்றும் பெண்கள் என 200 க்கும் மேற்பட்டவர்களின் போட்டோக்கள் இருந்துள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நான்கு மணிநேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர் மீது போக்சோ வழக்கில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியை இழுத்து மூட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண