கரூர் அருகே அரசு வேலைக்காக பட்டதாரி பெண் ஒருவர் பலமுறை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியும் தோல்வி அடைந்தார். இதனால் அப்பெண் மன உளைச்சலில் இருந்த நிலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, சோமூர் முத்தமிழ்புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ஏமூர் புதூர் பகுதி ஆபிசர் காலனியில் குடும்பத்துடன் தங்கியிருந்து பஸ்பாடி கட்டும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் பிருந்தா வயது (25). இவர் எம்.எஸ்.சி. படித்து விட்டு அரசு வேலைக்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி வந்துள்ளார். இதில் பலமுறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் வீட்டின் மாடி அறையில் இருந்த பிருந்தாவை அவரது தங்கை காவியா சாப்பிடுவதற்காக கூப்பிட சென்றார். அப்போது அந்த அறையில் பிருந்தா தூக்கில் தொங்கிய படி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவியா இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் சென்று பிருந்தாவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டதாரி பெண் பிருந்தா டிஎன்பிஎஸ்சி தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது. அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கும் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்