கரூரில் வழிப்பறி செய்த குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரவக்குறிச்சி நாகம்பள்ளி காந்தி நகரை சேர்ந்த ராதிகா (37) மற்றும் நாகம்பள்ளி, படத்தநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னாச்சி (50) ஆகியோர் சில தினங்களுக்கு முன் (TN 47 BX 2021 suzuki access ) இருசக்கர வாகனத்தில் கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அரவக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு மதுரை டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது




 


அந்த வழியாக அவர்களைப் பின் தொடர்ந்து வந்த மதுரை  மாவட்டம், மேலூர் பகுதியை சேர்ந்த பக்ருதீன், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வந்த், சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரி, மணப்பேட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன், மதுரை மாவட்டம், பொட்டல் களம் பகுதியைச் சேர்ந்த கண்ணன், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் டாட்டா சுமோ காரில் பின் தொடர்ந்து வந்து விபத்து ஏற்படுத்துவது போல் நடித்து அரவக்குறிச்சி நாகம்பள்ளியைச் சேர்ந்த ராதிகா மற்றும் பொன்னாச்சி அணிந்திருந்த ஒன்பதரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.


 


 


 





இது சம்பந்தமாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அரவக்குறிச்சி நாகம்பள்ளியைச் சேர்ந்த ராதிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான பகுருத்தீன், அஸ்வந்த் இருவரையும் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி இந்தத் திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பக்ருதீன், அஸ்வந்த் ஆகியோருக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த திருட்டு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்த அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படை போலீசாருக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார்.


 




கரூர் மக்கள் பயமின்றி வாழ இரவு நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் மேலும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார் . மேலும் வழிப்பறி, திருட்டு மற்றும் கொள்ளை போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டாஸ் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.